Wednesday 3 June 2009

தெருநாய்க்கு மரியாதை...............


என்னடா திரைப்பட பெயரில் பதிவு, ஆதலால் ஏதோ திரைப்படம் என்று என்ன வேண்டாம். இது ஒரு சொந்த ஆனால் இப்போது நினைத்தாலும் காதோரம் சூடாகும் அனுபவம்.

நான் ஒரு உரத்தொழிற்சாலையில் உற்பத்திப் பிரிவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த காலம். தொழிற்சாலை ஊரிலிருந்து ஒரு முப்பது கிலோமீட்டர் தள்ளி இருந்தது. ஆனால் எங்களை அழைத்துப் போக தொழிற்சாலை பேருந்து எங்கள் பேட்டையின் எல்லையில் உள்ள நகர பேருந்து நிறுத்தத்திற்கு வரும். அந்த இடம் என்னுடைய வீட்டிலிருந்து ஒரு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

எனக்கு மூன்று வேலை சிப்ட் டூட்டி. இதில் மிகவும் கடினமானது மாலை சிப்ட் தான். ஏனென்றால் இரவு வேலை முடித்து பேருந்து நிலையம் வர இரவு பதினொன்றை மணி ஆகிவிடும். அங்கிருந்து வீட்டிற்கு செல்ல முப்பது நிமிட இருட்ட்டோடும் தெருக்களில் நடை. இந்த நிறுத்தத்தில் நானும் மற்றொருவனும் இறங்கிக் கொள்வோம். நாங்கள் இருவரும் ஒரே சிப்டில் இருந்தவர்கள். பின்னர் நானும் இவனும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம், அது வேற கதை. கதையின் நாயகனை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம், ஆதலால் மற்ற தகவல்கள் இப்போது ஜுஜுபி மேட்டர்.

நிறுத்தத்திலிருந்து நாங்கள் வீடு சேரும் நேரம் வரை குறைந்தது ஒரு முப்பது தெரு நாய்களாவது எங்களை குறைத்து வழி அனுப்பும். இதில் மேலும் டார்ச்சர் என்னவென்றால் நண்பனின் வீடு முன்பே வந்து விடும். நான் பிறகு தனியாக நாய்க்கு பயந்துகொண்டு இன்னும் நெடுந்தூரம் போக வேண்டும். நாய்கள் அவ்வாறு குறைத்துக்கொண்டு வரும்போது நாயின் முகத்தைப் பார்த்து விட்டால் பயம் முட்டி நமக்கு காதோரம் சூடாகி விடும்.

கொடுமையிலும் கொடுமை மழைக்காலத்தில்தான். தொழிற்சாலையில் மழை காலத்திற்காக நல்ல "டக்பக்" ரெயின் கோட் கொடுத்திருப்பார்கள். அதை மழைக் காலத்தில் நாங்கள் அணிந்து கொண்டு நல்ல மழையில் வரும்போது நாய்க்கெல்லாம் மிகவும் ஆவேசம் வந்து வைக்கோ போல கழுத்து நரம்பு எல்லாம் புடைக்க எங்களை எதோ தீவிரவாதி போல திட்டிக்கொண்டே வரும். நண்பன் மிகவும் பயந்து ரெயின் கோட்டைக் கழற்றி அக்குளில் வைத்துக் கொண்டு மழையில் நனைந்து கொண்டே வருவான். நான் அவனை ஏன்டா நாய்க்கு இவ்வளவு மரியாதை மாலை கிண்டலடிப்பேன், என்னுடைய ரெயின் கோட் கிழியும் நாள் வரை.

மற்றும் ஒரு நாள் நான் நாய்களுக்கு மரியாதை கொடுக்காமல் ரெயின் கோட்டுடன் வீரமாக நடந்த போது ஒரு ஏழெட்டு நாய்கள் என்னை ஒசாமா பின் லாடனை விட கேவலமாக எண்ணி என்னுடைய "மழை கோட்டை" சின்னா பின்னமாக்கி "மன்மத ராசா" பாட்டில் வருபவளின் உடை போல ஆக்கிவிட்டது. அப்போது நான் பயந்து உள்ளுடையை சூடாக்கியது சரித்திரம்.

கதையின் கிளைமாக்ஸ் இங்குதான். இந்த கிழிந்த கோட்டை நான் மாற்ற சென்ற போது என்னுடைய மேலாளர் என்னை நாய் கொண்டு போட்ட வஸ்து போல பார்த்தது தான் நூறு நாய்கள் துரத்தியதற்கு சமமாக எண்ணுகிறேன்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

இராகவன் நைஜிரியா said...

// கதையின் கிளைமாக்ஸ் இங்குதான். இந்த கிழிந்த கோட்டை நான் மாற்ற சென்ற போது என்னுடைய மேலாளர் என்னை நாய் கொண்டு போட்ட வஸ்து போல பார்த்தது தான் நூறு நாய்கள் துரத்தியதற்கு சமமாக எண்ணுகிறேன் //

இந்த மேலாளர்களே இப்படித்தானோ...

கார்த்திகைப் பாண்டியன் said...

நொந்து நொம்பலம் ஆகுரதுன்னா இதுதானா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலமாக தங்களின் இப்பதிவைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

cheena (சீனா) said...

அன்பின் கும்மாச்சி - அனுபவம் கதை வடிவில் பதிவாக மாறியது நன்று - மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.