Friday 21 August 2009

சந்திரபாபுவின் வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.....மெட்டில் படிக்கவும்.-கவுஜ


பிரபலமான பதிவரெல்லாம்
புத்திசாலியில்லை,
புத்தியுள்ள பதிவரெல்லாம்
வெற்றி காண்பதில்லை.
வெற்றி காண்பதில்லை.

நல்லப் பதிவுக்கெல்லாம்
ஒட்டு கிடைப்பதில்லை
வோட்டுப் பெற்ற பதிவு எல்லாம்
நல்லப் பதிவும் இல்லை.

ஒட்டு போடும் மனிதரெல்லாம்
பின்னூட்டம் இடுவதில்லை
பின்னூட்டம் இடும் மனிதரெல்லாம்
ஓட்டுப் போடுவதில்லை.

பிரபலமானப் பதிவுகளில்
காண்பதெல்லாம் மொக்கை
பிரபலமாகாப் பதிவுகளில்
இருப்பதெல்லாம் சக்கை.
நல்லப் பதிவு,மொக்கைப் பதிவு
எந்தப் பதிவு ஆனாலும்.,
படிச்சிக்கிட்டு ஆகவேண்டும்
நாமெல்லாம் மட்டை...............

பிரபலமான பதிவரெல்லாம்
புத்திசாலியில்லை,
புத்தியுள்ள பதிவரெல்லாம்
வெற்றி காண்பதில்லை.
வெற்றி காண்பதில்லை.


இன்றைக்கு ஒரு பதிவரின் "ஒட்டுவிழவில்லை" என்ற புலம்பலின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு மொக்கை பாட்டு. சும்மா நகைச்சுவைக்குத் தான். முடிஞ்சா சிரிச்சுட்டு ஓட்டப் போடுங்க.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

vasu balaji said...

ஒரு மார்க்கமாத்தான் திரும்பி இருக்கீங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

:)

ஒரே காமெடியா இருக்கு போங்க சூப்பர்

geethappriyan said...

அற்புதம் அற்புதம் அற்புதம்
நண்பர் கும்ம்மாச்சி
நானே கவிதை போடுங்கன்னு உரிமையா கேட்கலாம்னு இருந்தேன்
வோட்டு போட்டாச்சு

geethappriyan said...

http://geethappriyan.blogspot.com/2009/08/blog-post_21.html

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.