Tuesday 12 January 2010

பழையன கழிதலும் புதியனப் புகுதலும்


பொங்கல் வருகிறது என்றாலே “முத்தண்ணா” மேர்சல் ஆயிடுவது வழக்கம். முத்தண்ணாவின் உண்மையானப் பெயர் ஜனார்த்தனம். தெருவில் உள்ள நாங்கள் அவருக்குப் வைத்தப் பெயர் “முன்ஜாகிரதை முத்தண்ணா”. இவர் பயங்கர உஷார் பார்ட்டி. தன் மொபெடை வாசலில் நிறுத்தியவுடன் மறக்காமல் ரியர் வியு மிர்ரோரையும் கழற்றி வீட்டுக்குள் கொண்டு போகும் முன்ஜாகிரத்தை நாங்கள் யாவரும் கண்டிராதது. ஆனால் சொல்லி வைத்தார் போல் அவருடைய வண்டியிலிருந்து ஸ்பார்க் பிளக் லவட்டப் படும்.

இவர் வீட்டை குறி வைத்து திருடும் கோஷ்டி எங்கள் வீட்டில் பின்புறம் இருக்கும் ஒரு குடியிருப்புத்தான். ஆனால் அவர்களை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. மிகவும் மோசமானப் பார்ட்டி. அவர்கள் நம் கண் முன்பே எல்லாவற்றையும் எடுத்து செல்லும் நவீன கள்வர்கள். கிரிக்கெட் விளையாடும் பொழுது மட்டையைப் பிடுங்கிக் கொண்டு செலவார்கள். அவர்களுடன் சென்று கெஞ்சி பின்னர் நம் பாக்கெட்டில் இருக்கும் ஒரு ருபாய் எடுத்துக் கொண்டு தான் மட்டையைக் கொடுப்பார்கள், விளையாட்டு அநாவசியமாகத் தடைப்படும். அங்கு இருக்கும் பெண்பிள்ளைகள் இவர்களைவிட மோசம நாங்கள் விளையாடும் மைதானம்தான் அவர்கள் கழிப்பிடம், பந்து அந்தப் பக்கம் போனால் அவர்கள் வேலை முடிந்து செல்லும் வரை அந்த பக்கம் திரும்ப முடியாது. எவனாவது அணிச்சையாகத் திரும்பி விட்டால் அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் “புழுத்த நாய்” குறுக்கே போக முடியாதபடி விழுந்து தெறிக்கும்.

போகிப் பண்டிகை அன்று அவர்கள் விடியலிலே எங்கள் தெருவுக்கு வந்து கையில் கிடைத்ததை எல்லாம் போட்டு எரிப்பார்கள். துணியெல்லாம் காயப் போடமுடியாது. ஒவ்வொரு வருடமும் முத்தண்ணா வீட்டு மரக் கதவு போகிக்கு இறையாகிவிடும். வருடா வருடம் போகி முடிந்தவுடன் புதுக் கதவு போட்டு பச்சை வர்ணம் அடித்து வைப்பார்.
அந்த வருடம் போகிக்கு நாங்கள் காலை எழுந்த பொழுது அவர் வீட்டுக் கதவு காணாமல் போயிருந்தது. நாங்கள் வழக்கமாக அவர் வீட்டுக்கு சென்று “என்ன சார் இந்த வருடமும் புதுக் கதவா” என்று கிண்டலாகக் கேட்டதற்கு, அவர் “டேய் நான் உஷார் பேர்வழி கதவை ராத்திரியே கழற்றி வீட்டுக்குள் வைத்து விட்டேன்” என்று எங்களை ஒரு வித பெருமிதத்துடன் நோக்கினார். .

அப்போது அவர் மகள் பதட்டத்துடன் ஓடி வந்து “அப்பா தோட்டப் பக்கம் பாருங்கப்பா, குளியலறைக் கதவைக் காணவில்லை, கூடவே பிளாஸ்டிக் பக்கெட், குவளை ஒன்றும் இல்லை நாமெல்லாம் குளிக்க முடியாதப்பா” என்றாள்.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

sathishsangkavi.blogspot.com said...

என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

கும்மாச்சி said...

சங்-கவி நன்றி. உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

என் வாழ்த்து வந்துச்சா?

cheena (சீனா) said...

அன்பின் கும்மாச்சி

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

முன்சாக்கிரதை முத்தண்னா பாவம் இல்லையா

மன்மதக்குஞ்சு said...

நன்னா ஷொன்னேள் போங்கோ

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.