Monday 18 January 2010

தமிழ் மொழி போல்.......


செம்மொழியாம் தமிழ்
செய்தி அறிவிப்பு
செய்தி வாசிப்பவரோ
செழுமையில் கவனிப்பு

அரிதாரம் பூசுவதில்
அழகிய கவனம்
உச்சரிப்பில் உதவாத
மெத்தனப் போக்கு

பழமொழியில் கொலை-
மொழிப் பற்று
“விலை”யும் பயிர்
“முலை”லே தெரியுமாம்.

விளையும் பயிரை
தேடுவதிலும் ஆபாசம்.
தமிழ் இனி
மெல்ல சாகும்
கூற்றுப் பொய்யாகும்
செழுமையில் கவனம்
குறையாதப் பொழுது
எங்கள் தமிழ்
முந்தானையில் வாழும்.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

அண்ணாமலையான் said...

அட்ட காசம்..

ஆரூரன் விசுவநாதன் said...

nice

கும்மாச்சி said...

ஆதரவிற்கு நன்றி.

ஹேமா said...

கிண்டலோடு கூடிய கோபம் கொண்ட வரிகள்.

கும்மாச்சி எங்கே உங்களை என் பக்கம் ரொம்ப நாளாய்க் காணோம்.

கும்மாச்சி said...

வேலைப் பளு ஹேமா, உங்களது உப்பு மடச்சந்தியும், வானம் வெளித்தப் பின்னும் இரண்டிற்கும் இரண்டொரு நாட்களில் வந்துப் படிக்கிறேன்.

Unknown said...

தமிழ் இனி மெல்ல சாகுமோ சாகதோ தெரியாது .
உங்க கவி நல்லம்

மன்மதக்குஞ்சு said...

அருமையான அட்டகாசமான அற்ப்புதமான கவிதை.
ஆமா! ப்ரியங்காவுக்கும் செம்மொழிக்கும் என்னப்பா முடிச்சு

மன்மதக்குஞ்சு said...

எனக்கு பளிச்'னு விளக்கு (பல்ப்) தான் எ(தெ)ரியுது

மன்மதக்குஞ்சு said...

Request to add tamil commenting form

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.