Tuesday 17 January 2012

கலக்கல் காக்டெயில் -56


ஜெயா டிவி பார்க்க வச்சிட்டாங்க

ந்த போகி, பொங்கல் வந்தாலே வீட்டுல எந்நேரமும் தொலைக்காட்சி ஓடிக்கிட்டு இருக்கு. மற்ற நாட்களில் சீரியல் தொல்லை என்றால் நாள் முச்சூடும் இப்பொழுது திரைப்படங்கள், நேர்காணல்கள், என்று கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் பொங்கலன்று என்னை ஒரு இரண்டு மணி நேரம் ஜெயா  டிவியில் குத்த வைத்து விளம்பரங்களைகூட பார்க்க வைத்தது இளையராஜாவின் இன்னிசை மழை.

ராஜாவின் பழைய பாடல்களை நேற்று லைவாக கேட்ட பொழுது "ராஜான்னா ராஜாதான்" என்று சொல்ல தோன்றியது.

இன்று டேமேஜர் ஆணி பிடுங்க அழைத்ததால் பல நல்ல பாடல்களை கேட்கமுடியவில்லை.

அவருக்கு சிம்பொனி வாசித்த ஹங்கேரி கலைஞர்களையும், மற்ற வாத்தியக்காரர்களையும் மேடையில் கண்டபொழுது வியக்காமல் இருக்க முடியவில்லை.

நேற்றைய தினத்தின் ஹைலைட் “பருவமே" பாடலுக்கு ஜாக்கிங் சத்தத்தை எப்படி கொண்டு வந்தார் என்று இளைய ராஜா சொன்னதும் செய்து காட்டியதும்.

பொங்கல் வைப்பது எப்படி?

ஊரிலிருந்து பெருசு போன் பண்ணி இன்னா பண்ணிக்கொண்டு இருக்கிறாய்? என்று கேட்க ஏன் என்ன விஷயம் என்று கேட்டால் ஒன்னும் இல்லை இந்த நமீதா பொங்கல் வைக்க சொல்ல நான் தூங்கிட்டேன், கொஞ்சம் யு டுயூபில் டவுன்லோட் செய்து போடுகிறாயா? என்று கேட்கிறார், எண்ணத்தை சொல்ல, நானே அந்த நேரத்தில ஆணி பிடுங்க வந்தாச்சு, மவனே அந்த டேமேஜர்கண்டி என் கையில கெடைச்சான்...................

ரசித்த கவிதை

பச்சரிசிச் சோறும்
பாதிநாள் பட்டினியும்
லஜ்ஜை கெட்டு வாழறப்போ
லெட்சுமணன் வந்து பிறந்தாயோ.........

-------------------செங்கோரசித்த கீச்சுகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளை நூறு மீட்டருக்கு மேல் துரத்தக்கூடாது..................நீதிமன்ற உத்திரவிற்கு

மாடுகளும் எங்களை நூறு மீட்டருக்கு மேல் துரத்தக்கூடாது..............

ஊர் தெரியாதவர்கள் கல்லூரியிலும், முகம் தெரியாதவர்கள் பேஸ்புக்கிலும், பெயரே தெரியாதவர்கள் டிவிட்டரிலும் நண்பர்களாகின்றனர்................பாரத்பாரதி


இந்த வார ஜொள்ளு 

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

Unknown said...

காக்டெயில் இல்ல இது கலர்டெயில்...ஸ்ஸ அபா!

சி.பி.செந்தில்குமார் said...

கிளாமர் ஃபோட்டோ ஓவர் என இனி என்னை யாரும் திட்ட மாட்டாங்க.. ஹி ஹி

கும்மாச்சி said...

விக்கி மாப்ள வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

சி.பி. உள்குத்து ஹூம், எப்படியும் கில்மா பட ஜிகிடிங்க படம் போடுவீங்க இல்ல, அப்போ இருக்குது வெளிக்குத்து.

முத்தரசு said...

ஹிம்...காக்டெயில் - நமீதா பொங்கல்...கலர் படம்...

ம்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி எஸ்.ரா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது இன்னிக்கு கில்மாடெயிலா......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
கிளாமர் ஃபோட்டோ ஓவர் என இனி என்னை யாரும் திட்ட மாட்டாங்க.. ஹி ஹி///

இருந்தாலும் இதையெல்லாம் ஆரம்பிச்சு வெச்சது நீங்கதான்னு திட்டுவாங்கள்ல.....?

கும்மாச்சி said...

ஆமாங்க்ணா, இன்னாங்க்ணா நம்ம கடைப்பக்கம் ரொம்ப நாளா காணோம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பல்லாம் அடிக்கடி ஆபீஸ்ல வேல பார்க்க சொல்லிடுறாங்கண்ணா.....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.