Saturday 21 January 2012

நாயர் சாம்ராஜ்யம்-(6)


ன்று நானும், டுபாகூரும் நம்பியாரிடம் அந்த பெண்கள் நாயரின் பெண்கள்தானே என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே நாயரின் மனைவி வெளியே வந்தாள்.

நம்பியாரிடம் அவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்று கேட்ட பொழுது வழக்கம்போல் அவர் ஜோலியை நோக்க சொல்லிவிட்டார். ஒரு வாரம் கழித்து நாயர் வந்தவுடன் எதாவது தகராறு நடக்கும் அல்லது நாயர் மனைவியை விரட்டிவிடுவார் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. நாயர் தன் மனைவியையும் குழந்தைகளையும் சேர்த்துக்கொண்டுவிட்டார்.

இந்த இடத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் கேரளத்தவர்களது ஆனாலும் வாடிக்கையாளர்கள் நம்மவர்களே. ஊரில் எப்பொழுது பந்த் எதுவென்றாலும் இவர்கள் முன்னேற்பாடாக கடையை திறக்க மாட்டார்கள்.

நாங்கள் ஒவ்வொருவரும் படித்து முடித்து வேலை தேடி நான், ஐயர் பட்டா ஒவ்வொருவரும் திசைக்கு ஒன்றாக பிரிந்து விட்டோம். நான் வெளிநாடு வந்த பிறகு ஒவ்வொரு முறை ஊருக்கு போனாலும் எப்படியும் அந்த ஏரியாவுக்கு விசிட் அடிப்பேன்.

இஸ்திரியும், அ.கு. வும் அதே இடத்தில்தான் இருக்கிறார்கள். ரகு அகமாபாதில் உள்ளான், நாங்கள் எல்லோரும் கல்யாணம் ஆகும் வரை வெளியூரில் இருந்தாலும் வருடம் ஒரு முறை விடுமுறையில் சந்தித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் நாங்களெல்லாம்  சந்திப்பது என்பது மிகவும் கடினமாகிவிட்டது.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின்பு அந்த புது வருடப் பிறப்பின் பொழுது நாங்கள் எல்லோரும் சேர்ந்து பார்ட்டி வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. டுபாக்கூருதான் ஏற்பாடு செய்தான். நம்ம பழைய ஏரியாதான், நீ பல வருடங்களுக்கு பின்பு வருவதானால் அந்த இடத்தை கண்டு பிடிப்பது கடினமாக இருக்கும், என் வீட்டிற்கு வந்து விடு அழைத்து செல்கிறேன் என்றான்.

அந்த மூன்று நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி.  போகும் வழியில் அந்த கட்சி தலைவர் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல தட்டிகள் எங்கும் தென்பட்டது. அதில் “வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்” கோழிக்காலார், தொகுதி எம்.எல் எ. என்று போட்டிருந்தது.

டுபாக்கூர் ஓட்டல போகுமுன்பு அந்த இடங்களை விவரித்து பழைய கதைகளை நினைவு படுத்திக் கொண்டு வந்தான்.

நாடாரின் விறகு தொட்டி இருந்த இடத்தில் ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அதில் "வேலாயுதன் சிட்பன்ட்ஸ்” போர்டு தெரிந்தது.


நம்பியார் கடை இப்பொழுது மாறியிருந்தது. அவர் கடையில் இப்பொழுது வேறொருவன் இருந்தான். நம்பியார் போன வருடம் மாரடைப்பில் இறந்துவிட்டாராம். வேலாயுதன் பேக்கரி இப்பொழுது விஸ்தரிக்கப்பட்டு அருகில் ஒரு அசைவ உணவு விடுதியும் தொடங்கியிருந்தான்.

நாயர் டீக்கடை ஒரு பெரிய ஓட்டலாக மாறியிருந்தது. நாயரின் கடையின் பின்புறம் ஒரு பெரிய குடியிருப்பு, சொந்தக்காரர் நாயராம். அதன் அருகிலேயே “பிந்து ஜ்வேல்லேரீஸ்” நாயரின் பெண்ணின் பெயரில் இருந்தது.

நாயரின் பெண் உள்ளூரு அரசியல்வாதி மகனை மனந்திருந்தாள். நாயர் தன் இன்னொரு மகளுக்கும் கல்யாணம் முடித்து அந்த பெண் இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறதாம்.

நாயரின் இரு மகன்களும் நகைக் கடையை கவனித்துக் கொள்கிறார்கள். அதில் முதல்வன் இந்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலில் எதிர்கட்சி சார்பில் தன் மச்சானையே எதிர்த்து நிற்கிறான்.

நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பல வருடங்கள் கழித்து சந்தித்ததில் பார்ட்டி நல்ல களை கட்டியது. அந்த ஓட்டலில் வசதி நன்றாக இருந்தது.  இந்த ஓட்டல நாயருடையதுதான் என்று டுபாக்கூர் ஆரம்பித்தான்.
நீ வழியில் பார்த்தாயே கோழிக்காலார், அது நாயருடைய மகன் தான். 

நாயர் உயிரோடு இருக்கிறாரா? என்று கேட்டேன்.

ஏன் இல்லாமல் அவர் உணவு விடுதி இன்னும் விஸ்தரிக்கப்பட்டு அவர் கல்லாவை விட்டு நகர்வதில்லை, அங்கிருந்தபடியே அவருடைய ராஜாங்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவருடைய மகன்கள் அரசியலில் தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டிருக்கின்றனர் என்றான்.

நாடார்கள் என்ன ஆனார்கள்? என்றேன். 

அவர்கள் தங்கள் சொத்தை நாயரிடமும், வேலாயுதத்திடமும் விற்று விட்டு பல வருடங்கள் முன்பே ஊருக்கு போய் விட்டார்கள் என்றான்.

சமீபத்தில் நடந்த இரு மாநில தகராறு அடிதடிகளில் இந்த இடம் பாதிக்கப்படாததில் எனக்கு ஆச்சர்யமில்லை.

..................முற்றும்

இது என்னுடைய முதல் தொடர் முயற்சி. நான் சிறுவயதில் வாழ்ந்த இடத்தில் எங்களது அனுபவமும், கவனிப்புமே இதை எழுதத்தூண்டியது.  என் தொடரை தொடர்ந்து ஆதரித்து வந்தவர்களுக்கு நன்றி.

இளையராஜாவின் தூரிகை ஓவியங்களை உபயோகப்படுத்தியதற்கு அவருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கம்


Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

Unknown said...

நமது வாழ்வில் இளைளபருவத்தில் டீ கடைதான் விவாத மேடையாகவும்...நண்பர்களை சந்திக்கும் இடமாகவும் இருக்கிறது அந்த தேனீர் கடைகள் பெரும்பாலும் நாயர்களுடையதாக போகிறது நான் மிகவும் ரசித்த தொடர்....என் வாழ்வில் ஏகப்பட்ட நாயர்களை சந்தித்து விட்டேன்.....பூகம்பமே வந்தாலும் டீய ஆத்துரதை நிறுத்தமாட்டாங்க....நன்றி...நண்பர் கும்மாச்சி அவர்களுக்கு...

கும்மாச்சி said...

உங்களது வருகைக்கும் இந்த தொடருக்கு கொடுத்த ஆதரவிற்கும் நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப சீக்கிரமே முடிச்சிட்டீங்களே. இன்னும் கொஞ்சம் அனுபவங்கள், நிகழ்வுகளை சேர்த்திருக்கலாமோ?

ஹேமா said...

அழகான ஓவியங்கள்.வாழ்த்துகள் !

இப்போதுதான் வாசித்து முடித்தேன் உங்கள் தொடரை.இயல்பான நடையின் அழகான வாழ்வியலைச் சொன்னமாதிரியான கதை.நல்ல முயற்சி கும்மாச்சி.வாழ்த்துகள் !

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.