Thursday 5 January 2012

தொடர் தொடங்கலாமா?


எல்லோருக்கும் அன்பு வணக்கங்கள். வலைப்பூ தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.  அப்பொழுதிலிருந்தே ஒரு தொடர்கதை எழுதவேண்டும் என்ற ஒரு நப்பாசை மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஆதலால் அப்பொழுதே ஒரு இரண்டு மூன்று அத்தியாயங்கள் எழுதி வைத்திருந்தேன். ஆனால் ஏதோ காரணத்தினால் அதை மேலும் தொடராமல் என் கணினியிலேயே வைத்திருந்தேன்.

அதற்குள் மிகவும் எளிமையான, அரசியல் கட்டுரை, மொக்கை, சிறுகதை, கவிதை என்று சுமாராக வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று என்று பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு உண்டான ஆதரவுகள் உங்களிடமிருந்து பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

என்னுடைய பழைய இடுகைகள் எல்லாமே கணினியில் சேமித்து வைத்திருந்தேன். அதையெல்லாம் ஒரு நாளைக்கு வகைப் படுத்திக்கொண்டிருந்த பொழுது இந்த எழுதி முடிக்காத தொடர் கதை தென்பட்டது. அதை எழுத ஆரம்பித்த கதை களமும், கருவும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

எனது சிறிய வயதில் சென்னை நகரின் சிறிதே ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு சிறிய வீட்டில் இருந்தோம். அந்த இடத்தில் ஒரு புதிய சமுதாயம் ஒன்று தோன்றி படிப்படியாக வளர்ந்ததை இந்த கால கட்டத்தில் சொல்லலாம் என்று தோன்றியதால் இனி வாரம் ஒரு முறையாக பதிவிட இருக்கிறேன்.

“நாயரின் சாம்ராஜ்யம்” என்று தொடங்கவிருக்கும் தொடரை வாரம் ஒரு பாகமாக வெளியிட எண்ணம். தொடருக்கு எனது பதிவுலக நண்பர்களின் ஆதரவையும் கருத்துக்களையும்  வழக்கம்போல் எதிர்பார்க்கிறேன்.


என்றென்றும் அன்புடன்
கும்மாச்சி  


Follow kummachi on Twitter

Post Comment

17 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

தொடர்ட்டும் நண்பரே....

கும்மாச்சி said...

வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி ரஹீம்.

மன்மதக்குஞ்சு said...

தேன் சுவையுடன் தொடர் ஆரம்பமாகட்டும்

கும்மாச்சி said...

வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி மன்மதக்குஞ்சு.

Anonymous said...

இனிதே தொடருங்கள்...

கும்மாச்சி said...

ஆதரவிற்கு நன்றி

ஆமினா said...

வாழ்த்துக்கள் சகோ

கும்மாச்சி said...

நன்றி ஆமினா.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...

கும்மாச்சி said...

நன்றி எஸ்.ரா.

Ashwin-WIN said...

வாழ்த்துக்கள் தொடருங்கள் நண்பரே.. வார்த்தைக்கேது தடை.

குறையொன்றுமில்லை. said...

தொடருங்க படித்து ரசிக்க காத்திருக்கோம்.

rajamelaiyur said...

ஆவலடன் எதிர்பார்க்கிறோம்

rajamelaiyur said...

நண்பர்களே உங்களுக்காக :

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)

Unknown said...

கலக்குங்க மாப்ள தொடரை தொடர காத்திருக்கிறேன்!

கும்மாச்சி said...

விக்கி ஆதரவிற்கு நன்றி.

அக்கப்போரு said...

தொடருங்க படிச்சுருவோம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.