Friday 3 February 2012

ஒண்டிக்கு ஒண்டி வரயா?..................கேப்டன் சவால்


இன்று கேப்டனை சட்டசபை நிகழ்ச்சியிலிருந்து பத்து நாட்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டவுடன் தன்னுடைய அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தெளிவாகவே பேட்டியளித்தார்.

முதலில் அவருடைய தைர்யத்தை பாராட்ட வேண்டும்.

நாங்களா அவர்களுடன் கூட்டணிக்கு அலைந்தோம், அவர்கள்தான் வந்தார்கள், கூப்பிட்டார்கள், ரூம் போட்டு காத்திருந்தார்கள் நாங்கள் ஆதரவு கொடுத்ததால்தான் அவர்கள் ஜெயித்தார்கள்.

ரூம் போட்டாங்களா, சொல்லவே இல்லையே, கேப்டன் உங்க இரண்டு கட்சியையுமே ஜெயிக்க வைத்தது கலைஞர்தானுங்க.

எங்களை பார்த்து திரானியிருந்தால் சங்கரன்கோவிலில் தனியாக நிற்க தயாரா? என்று விரலைநீட்டி கேட்கிறார்கள் இவர்கள் பதிமூன்று இடைதேர்தலில் தோற்றார்கள், ஐந்து இடைதேர்தலில் பயந்து ஓடினார்கள்.

கேப்டன் இப்படி அப்பட்டமா அம்மாவுக்கு கேட்டா பிடிக்காது, வீட்டை பூட்டியே வையுங்க, இல்லை என்றால் உள்ளே அரை கிலோ கொண்டு வைத்து களி சாப்பிட அனுப்பிடுவாங்க.

மதுரைக்கே மல்லிகை பூவா? திருநெல்வேலிக்கே அல்வாவா? தே.மு.தி.க. வுக்கே சவாலா? திரானியிருந்தால் நீங்க ராஜினாமா பண்ணிட்டு வாங்க, நாங்க ராஜினாமா பண்றோம், கவர்னர் ஆட்சியில் தேர்தலில் சந்திக்க தயாரா?

சபாஷ் ஒண்டிக்கு ஒண்டி கூப்பிடுறீங்க, இது விபரீத விளையாட்டுங்க, குறுக்கே அவிக பூந்துருவாய்ங்க.

நியாயத்தை பத்தி இவங்க பேசக்கூடாது, வாஜ்பாய் ஆட்சியை பதிமூன்று நாளில் கவிழ்த்தவங்க தானே இவங்க.

கேப்டன் ரொம்ப பொங்காதீங்க.

என்னை பார்த்தா அருவருப்பா இருக்குங்கறாங்க. இவங்களை பார்த்தா எங்களுக்குக் கூடத்தான் அருவருப்பா இருக்கு. 

கேப்டன் எங்களையும் சேர்த்துக்கங்க, எங்களுக்கு கூட உங்கள் ரெண்டு பேரையுமே பார்த்தால் அருவருப்பாதான் இருக்குது.

எங்களுக்கு தகுதியில்லை என்று சொல்லுகிறாங்க இந்த அம்மா, இவங்களுக்கு இன்றைய நிலவரமுன்னு போர்டு போடுவாங்க அது மாதிரி இன்றைய அமைச்சர் யாரு? ஐ.ஏ.எஸ் யாரு? ஐ.பி. எஸ் யாருன்னு தெரியலை இவங்களுக்கு தகுதி இருக்கா?

சபாஷ் சரியான கேள்வி? நீங்க கேட்டிங்கன்னு இன்னொரு தபா மாத்துவாங்க, ரோசையா இப்பவே ஜன்னிகண்டு நடுங்கிட்டு இருக்காரு. 

இவங்கள பாராட்டிகிட்டே இருக்கணும், மக்களுக்காக பேசினா புள்ளி விவரம் இருக்காங்கறாங்க? நீங்க ஊரை கொள்ளையடித்ததற்கு புள்ளிவிவரம் இருக்கா?

நல்ல ஐடியாதான் கேப்டன் புள்ளிவிவரம் வேண்டும் என்றால், கலைஞராண்ட போங்க அவரு புட்டு புட்டு வைப்பாரு. 

என்ன நடந்ததோ? இல்லை நடக்கப் போகுதோ, ஆனால் பதிவுலகம் கேப்டன் உங்களுக்கு நன்றி சொல்லுது. நீங்க நேற்று வைத்த பொங்கலில் எங்க பதிவுலக நண்பர்கள் எல்லாம் இதை வைத்தே கும்மியடித்து பயங்கரமா ஹிட்ஸ் அள்ளிக்கிட்டு இருக்காங்க. நீங்க தனியா விருகம்பாக்கத்திலேயோ, சட்டசபையிலோ இல்லை டாஸ்மாக்கிலோ எங்க நின்றாலும் உங்களுக்கு எங்க ஓட்ட சும்மா இன்ட்லில ஒன்று, உடான்சில் ஒன்று, தமிழ்மணத்தில் ஒன்று, உளவுல ஒன்று, தமிழ்10ல் ஒன்று என்று சும்மா நச்நச்ன்னு குத்தி ஜெயிக்க வச்சிடுவோம்.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

Unknown said...

மாப்ள ஏன் பய புள்ள புசுக்கு புசுக்குன்னு பொங்குது...தொழில்ல பொறும தான முக்கியம்!

கும்மாச்சி said...

அது வேறே ஒன்னும் இல்லை மாப்ள, சில சமயம் போதை இறங்கும் பொழுதும் பொங்கிவரும். இதெல்லாம் சரக்கில சகஜம்.

மன்மதக்குஞ்சு said...

அடிச்சு ஆட்ரா

சமுத்ரா said...

ஹி ஹி nice ..

கும்மாச்சி said...

ம.கு. இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

கும்மாச்சி said...

சமுத்ரா வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

முத்தரசு said...

நல்லாத்தான் பொங்கி இருக்கிகே

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மனசாட்சி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.