Monday 13 February 2012

கலக்கல் காக்டெயில் -60


நானா ஊழல் செய்தேன்?

பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகும் பி.வி. ஆச்சார்யா, தனக்கு கர்நாடக அரசு கொடுத்த நெருக்கடியை கூறி தலைமை நீதிபதி நியமித்த சொத்து குவிப்பு வழக்கு சிறப்பு வழக்கறிஞர் பதவியை தக்க வைத்து கர்நாடக அரசு நியமித்த அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஊழல் புகாரை எதிர்கொள்ள தயங்கி வாய்தா மேல் வாய்தா வாங்கி எதிர்க்கட்சி புகார்களுக்கு ஆளாகியது நாடறிந்த விஷயம்.

இப்பொழுது இந்த நடவடிக்கை அந்த வழக்கில் வரப்போகும் தீர்ப்பை மேலும் எதிர் பார்க்க வைக்கிறது.

ஏய்ச்சுப்புட்டீரே அய்யா? என்று பாடி வோட்டுக் கேட்டு பின்பு அவர்களுடனே ஒட்டி உறவாடுவதன் உள்நோக்கம் இப்பொழுது புரிகிறது.


மின்சாரமா? முதலில் சங்கரன்கோவிலை பாருங்கப்பா?


தமிழ்நாட்டின் இன்றைய மொத்த மின்சாரத்தேவை 11000 மெகாவாட், ஆனால் உற்பத்தி செய்யப்படுவதோ வெறும் 8000 மெகாவாட் மட்டுமே. இந்த வித்தியாசத்தை பூர்த்தி செய்ய மேலும் புதிய வழிகள் திட்டமிட்டு அமைக்கப்படாததே தற்போதைய வரலாறு காணாத மின்வெட்டுக்கு காரணம்.

மின்சாரத்துரைக்கு ஏற்படும் நஷ்டத்தை கருத்தில் கொண்டே அண்டை மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதையும் நிறுத்தியிருக்கிறது அரசு. மேலும் இத்தகைய அளவு கொடுக்க அண்டை மாநிலங்களில் உபரி மின்சாரம் இருக்குமா? இதனால் தொழில் துறைக்கும், விவசாயத்துறைக்கும் ஏற்படும் வருவாய் இழப்பு, தமிழ்நாட்டை வரும்காலங்களில் வெகுவாக பாதிக்கபோவது உறுதி.

அது சரி நம்ம ஆட்சியாளர்களுக்கு இதையெல்லாம் சரி செய்ய எங்கே நேரம், அம்மாதான் சொல்லிட்டாங்களே “முதலில் சங்கரன்கோவிலை பாருங்கப்பா”.


ரசித்த கவிதை

நியாயமா.....?
அழகான தாளின் மேல்
அடிக்காமல் எழுது...."
பேனாவிற்கு கட்டளையிடுவேன் -
எழுதும் முன் யோசிப்பது
என் கடமையென்பதை
மறந்துவிட்டு....!
வெள்ளையாய் திரிந்தவள்மேல்
கோடுகளைப் பதித்துவிட்டு
மீண்டும் வெள்ளையாய்
இருக்கச் சொல்லும்
உன்னைப் போல.....!
-------------------------- ரேணுகா தேவி


இந்த வார ஜொள்ளு 

 
12/02/2012

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

முத்தரசு said...

ஊழலாவது...மின்சாரமாவது...அரசியல்...சங்கரன்கோவில் அந்த துணிச்சல் பிடிச்சிருக்கு

கும்மாச்சி said...

யார் துணிச்சலை சொல்லுறீங்க, ஆட்டோ பயம் அத்துப்போனதையா?

முத்தரசு said...

//கும்மாச்சி said...
யார் துணிச்சலை சொல்லுறீங்க//

இவ்வளவு ரண களத்திலேயும் சங்கரன் கோவில் இடை தேர்தலில் களம் இறங்கியவர்களின் துணிச்சல்...ம்..

அதை சொன்னேன்

கும்மாச்சி said...

அவர்களின் துணிச்சல் நிச்சயமாக பாராட்டப்படவேண்டும்.

Sankar Gurusamy said...

அரசாங்கங்கள் தம் வக்கீல்களுக்கு கொடுக்கும் அழுத்தம் பரவலானதுதான். இதில் திரு ஆச்சாரியார் ராஜினாமா செய்ததுதான் ஆச்சரியம்..

சிறப்பான பதிவு.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

கும்மாச்சி said...

ஷங்கர் குருசாமி தங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.

KANA VARO said...

காக்டெயில் செம கலக்கல், இன்னும் கொஞ்சம் சைடிஸ் சேருங்க.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி Kana Varo

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இடைத்தேர்தலை வெச்சு கொஞ்சநாள் மக்களை மின்வெட்டு பிரச்சனைல திசை திருப்பலாம்னு பாத்தாங்க, ஆனா 12 மணி நேர மின்வெட்டுன்னா என்னதான் பண்ண முடியும்? விஜயகாந்த் - ஜெ மோதல் கூட மக்களை திசைதிருப்புவதற்காக திட்டமிடப்பட்டதாக இருக்கலாம்...

கும்மாச்சி said...

நல்ல காதுல பூ சுத்துறாங்க.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.