Wednesday 1 February 2012

கலக்கல் காக்டெயில் -58


ஆயிரம் கோடி முடக்கம்

தமிழ்  படங்கள் வெளியிட முடியாமல் பெட்டிக்குள் முடங்கியிருப்பதன் மதிப்பே ஒரு ஆயிரம் கோடி ரூபாய் தேறுமாம். இவை அனைத்தும் சிறிய தயாரிப்பாளர்கள் படமாம். இதற்கு காரணம் வெளியிட திரையரங்குகள் கிடைக்காததே என்று சொல்லப் படுகிறது. இப்பொழுதெல்லாம் சிறிய தயாரிப்பாளர்கள் படங்களை விநியோகஸ்தர்கள் கண்டு கொள்வதில்லை. பெரிய தயாரிப்பாளர்கள் மட்டுமே கோடிகளை இரைத்து படம் பிடித்து, நல்ல விளம்பரங்களும் செய்து வெளியிடக்கூடிய நிலைமை. இதை அரசாங்கம் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதற்கு கட்சி பேதமெல்லாம் கிடையாது. இந்த ஆட்சி வந்தவுடன் எல்லாம் மாறும் என்ற நினைத்த சிறு தயாரிப்பாளர்கள் பிழைப்பில் மண் விழுவதுதான் மாறாதது.

எத்தனை வீடுகளும் நிலங்களும் பெண்டாட்டி நகைகளும் விற்கப்பட்டதோ தெரியவில்லை.

ஆளுநர் உரையும் கேப்டனின் நிலையும்

இப்பொழுது ஆட்சியில் இருப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல காலம். சாதாரண பெரும்பான்மை இருந்தாலே அம்மா நடவடிக்கைகள் அதிரடியாகத்தான் இருக்கும், எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. இப்பொழுது எதிர் கட்சி தலைவரின் செயல்பாடுகள் ஒன்றும் சொல்லும்படியாக இல்லை.

நேற்றைய ஆளுநர் உரை முடிந்தவுடன் கேப்டன் பின் வாசல் வழியாக “எஸ்” ஆகிவிட்டார்.

இன்றைய நடவடிக்கையான ஆளுநர்உரை மீதான தீர்மானத்தின் பொழுது பண்ருட்டியார் “தானே” புயல் நிவாரணம் பற்றிய கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கும் பொழுதே அம்மா அவரை ஆப் செய்துவிட்டார்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று நொந்து போயிருப்பார்கள். போர்க்கால அவசரம் என்ற சொல் வெறும் ஊடகங்களுக்காக உபயோகிக்கப்பட்டு நடவடிக்கையில் அரசு மெத்தனமாக இருந்தது உலகுக்கே தெரியும். மின்சாரம் கடலூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான இடங்களில் திரும்ப வருவதற்கே கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆனதாம். இன்னும் சில இடங்களில் இரவில்தான் மின்சாரம் கிடைக்கிறது என்ற புகார்களும் உண்டு.

நிவாரண நிதி மக்களை முழுவதுமாக சென்றடையாமல் அதிகாரிகளும் அல்லக்கைகளும் சுருட்டியது சந்தி சிரித்தது.

கேப்டன் தன் தொலைகாட்சியில் மட்டும் அறிக்கை விட்டுவிட்டு சட்டசபையில் பம்முவது ஒரு எதிர் கட்சி தலைவருக்கு அழகல்ல.

ஒரு வேளை நாடாளுமன்ற தேர்தலை கணக்கு வைத்து ரொட்டி துண்டுக்கு காத்திருக்கிறாரோ?

ட்வீட் எடு கொண்டாடு

காதலர் தினம் - பொழப்பில்லாதவனுக்கு ஆரவாரம்; பொழைக்க தெரிஞ்சவனுக்கு வியாபாரம்.!.................ஆல்தோட்ட பூபதி

எவன் ஒருவன் சிறுநீர் கழிக்க நீச்சல் குளத்தை விட்டு எழுந்து செல்கிறானோ அவனே சிறந்த பண்பாளன் !!.........அலேக்சியஸ்

ஆளுநர் தான் புதியவரே தவிர,ஆளுநர் உரை புதியதாக இல்லை-விஜயகாந்த் #அவரா புதியவர்? அவர், 60 வருஷம் பழசானவர் தான் கேப்டன்!..................பாலு

ஆண்களுக்குப் பிடிக்காத ஒரே வாக்கியம் "டாப்-அப் பண்ணிடுடா,, பேலன்ஸ் இல்லே"..............விவாஜி

இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

சி.பி.செந்தில்குமார் said...

சுமாரான ஃபிகர் ஸ்லோகன் செம

சி.பி.செந்தில்குமார் said...

காக்டெயில் இப்போ உங்க பிராண்ட் ஆகிட்டு இருக்கு :) குட் ஒன்

கும்மாச்சி said...

சி.பி. பின்னூட்டத்திற்கு நன்றி.

முத்தரசு said...

கேப்டன் பொங்கி விட்டாரே

முத்தரசு said...

தே தி மு க / அ தி மு க காரசாரமான விவாதம்
இனி என்ன நடக்கும் பாப்போம்????!!!!

கும்மாச்சி said...

கேப்டன் பொங்கிய விஷயம் வரவேற்கத்தக்க ஒன்று. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது? என்று.

rajamelaiyur said...

//
ஆளுநர் தான் புதியவரே தவிர,ஆளுநர் உரை புதியதாக இல்லை-விஜயகாந்த் #அவரா புதியவர்? அவர், 60 வருஷம் பழசானவர் தான் கேப்டன்!..................பாலு
//

haa. haaa .. haa

rajamelaiyur said...

அனைத்தும் அருமை .. முதல் படம் உண்மை

கும்மாச்சி said...

ராஜா வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.