Saturday 10 August 2013

"தலைவா" வும் சில ஏன்?களும்

சமீபத்தில் தமிழ் ஊடகங்கள், மற்றும் சமூக வலைதளங்களில் ஹாட்டாக போய்க்கொண்டிருக்கும் டாபிக் "தலைவா"

இந்த படம் ஆகஸ்டு ஒன்பதாம் தேதி வெளிவருவதாக முதலில் செய்திகள் வந்தன. திடீர்னு படம் வருவதற்கு இரண்டு நாள் முன்பு படம் வெளிவருவது பற்றியை சர்ச்சைகள் தொடங்கின.

அதை தொடர்ந்து நமக்கு தோன்றிய சில ஏன்? களே இவை. விஷயம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

தலைவா படம் ஆளுங்கட்சியினரால் தடை செய்யப்படுவதாக செய்திகள் வந்தன? இதற்கு ஆளும் கட்சி சார்பில் யாரும் விளக்கம் அளிக்காதது ஏன்?

படத்தை வெளியிடும் வேந்தர் மூவிஸ் இதை ஆட்சேபிக்காதது ஏன்?

படம் வெளிவருவதில் உள்ள சிக்கலுக்கு எதிராக நடிகர் சங்கம் குரல் கொடுக்காதது ஏன்?

தயாரிப்பாளர்கள் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தலைவரான "எதிர்கால அண்ணா" எஸ்.எ.சி அரசை எதிர்த்து அறிக்கை விடாதது ஏன்?

படத்தின் கதாநாயகன் அரசை எதிர்த்தோ இல்லை பிரச்சினையை விளக்கியோ (கமலை போன்று) அறிக்கையோ இல்லை பத்திரிகையாளர் சந்திப்போ ஏற்பாடு செய்யாதது ஏன்?

வெடிகுண்டு மிரட்டல்கள் என்று செய்திகள் வந்த கூட்டத்தை அடையாளம் காணாதது ஏன்?

தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வெளியிடத் தயங்கியது ஏன்?

பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்கால அண்ணாவும் எம்.ஜி.ஆரும் அம்மாவை காண கொடநாடு சென்றபொழுது வாசலிலேயே மடக்கி அனுப்பப்பட்டது ஏன்?

குளிரடிக்குதே ஏன்?
எதிர்கால எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக அறிவாலயம் அறிக்கை விட்டது ஏன்? (கிரீஸ் டப்பாவ எப்படி உதைச்ச?)

படம் மொக்கை(மரண) என்று விமர்சனங்கள் வருவது ஏன்?

படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கில்லை என்று விளக்கமளித்துள்ளது, அப்படியானால் வரிவிலக்குதான் காரணமென்றால் கதாநாயகன் தனது சம்பளத்தில் குறைத்துக்கொண்டு படத்தை வெளியே கொண்டு வரவில்லையே ஏன்?

படம் வெளிவருவதில் உள்ள சிக்கலுக்கு காவல்துறை காரணமில்லை என்று விளக்கமளித்துள்ள நிலையில் விளம்பர போர்டுகளை அகற்றச்சொன்னது ஏன்?

ரசிகர்களுக்கு ஆளும்கட்சியை பகைத்துக் கொள்ளாமல் இருக்க அறிவுரைகள் கொடுத்தது ஏன்?

எதிர்கால எம்.ஜி.ஆருக்கு சொம்படிக்கும் சத்தியராஜ் குரல் கொடுக்காதது ஏன்?

சுப்ரீம் சொம்பு இந்த விஷயத்தில் அட்ரெஸ் இல்லாமல் இருப்பது ஏன்? 

ஓரிரு நடிகர்கள் தவிர மற்றவர்கள் மௌனம் காப்பது ஏன்?

ஒரு படம் வெளிவரவில்லை என்றால் இவ்வளவு ஆர்பாட்டம் ஏன்?

இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு ஒரு பதிவை தேற்றியது ஏன்?



Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

mage said...

swappa kanna kattudhu eha padikkumbodhe

Manimaran said...

//இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு ஒரு பதிவை தேற்றியது ஏன்?//

HAA.HAA..

Manimaran said...

ங்ண்ணா..படத்தை யாருமே தடை செய்யலீங்கன்னா.. இவங்களே செஞ்ச செட்டப் ..ஆனா பாவம் ஸெல்ப் எடுக்கல..

Manimaran said...


//படம் மொக்கை(மரண) என்று விமர்சனங்கள் வருவது ஏன்?//

ஹா.ஹா. இது என்னங்ண்ணா கேள்வி... மொக்கை படத்தை மொக்கைனு தான சொல்லியாகனும்.

Manimaran said...


//படம் வெளிவருவதில் உள்ள சிக்கலுக்கு எதிராக நடிகர் சங்கம் குரல் கொடுக்காதது ஏன்?//

எல்லா ஒரு விளம்பரம்தான் என்கிற உண்மை தெரிஞ்சதால..

Unknown said...

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்

”தளிர் சுரேஷ்” said...

இந்த பதிவையும் இப்படி விழுந்து விழுந்து படிப்பது ஏன்?என்று ஒரு கேள்வியும் கேட்டிருக்கலாம்! ஹா! ஹா! ஹா!

Anonymous said...

குளிரடிக்குதே ஏன்? LoL

Prem S said...

HAA HAA SEMA

பாலா said...

எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான். அது எங்கள் எதிர்கால நிரந்தர முதல்வர் டாக்டர். ஹி ஹி

K said...

ஹா ஹா எம்புட்டுக் கேள்விகள்? பதிலைதான் காணோம் பாஸு!

Anonymous said...

இந்த மாதிரி பதிவையெல்லாம் நாங்க படிக்கிறோமே ஏன்? அதற்கு ஒரு கமென்டும் போடுறோமே ஏன்?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.