Thursday 2 February 2012

வெட்கம், கண்ணு படப்போகுதையா


நேற்றைய தினம் சட்டசபையில் நடந்த கூத்தை தமிழ்நாடு வேடிக்கை பார்த்தது.

முதலில் அம்மா ஒற்றை விரலை ஆட்டி கேப்டனுக்கு சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்து நிற்க திராணி இருக்கா என்று சவால் விட்டதும் தெரிந்து கொண்டு பேசுங்கள் என்று நக்கல் செய்ததைது எல்லோரும் பார்த்ததுதான்.

கேப்டன் சினிமா பாணியில் ஆளும் கட்சியில் மிகவும் தகுதியுடன் அமர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்த உறுப்பினர்களை கையை உயர்த்தி நாக்கை கடித்து ஏதோ சொன்னார், அவருடைய மைக் அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் அது நம் காதில் விழவில்லை. அவருடன் அருகில் அமர்ந்திருந்த பண்ருட்டியார் முகபாவத்திலிருந்து அவர் சினிமா பாணியில் என்ன சொல்லியிருப்பார் என்று யூகிக்க முடியும்.

ஆனால் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே அம்மாவின் வீராவேச பேச்சுதான். தே.மு.தி.க வுடன் கூட்டணி வைத்தற்கு வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் என்று சொன்னார். தங்கள் கட்சி தொண்டர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் இந்த கூட்டணி அமைக்க நேர்ந்தது என்று மிகவும் வெட்கப்பட்டார்.

இருந்தாலும் அம்மா இவ்வளவு நாள் கழித்து வெட்கப்பட்டதற்கு அவர் கட்சி உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருந்து பெஞ்சை உடையும் வரை தட்டலாம். மேலும் அவர் சொன்ன தகுதியில்லாதவருக்கு பதவி கிடைத்ததன் பலனை விலாவரியாக சொன்னார்கள்.
மக்களின் சிந்தனை வேறு விதமானது என்பதை இவர்கள் யாவரும் புரிந்து கொள்ளவில்லை.

மக்கள் தகுதியை பார்த்து வாக்களித்திருந்தால் சட்டசபையில் இப்பொழுது இருக்கும் உறுப்பினர்களில் ஒருவர் கூட தேறமாட்டார்கள் (சபாநாயகர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்று யாருமே தேறமாட்டார்கள்)

அடுத்ததாக வெட்கம் பற்றி மக்கள் சிந்திக்கிறார்கள்.

ம.தி.மு.க வை இந்த தகுதி இல்லாதவர்களுக்காக கழற்றி விட்டு அவமானப்படுத்தியதை நினைத்து மக்கள் வெட்கப்பட்டு, வேதனைப்படுகிறார்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கும்பொழுது வராத வெட்கம், அதே வழக்கில் கோர்ட் கூண்டில் நின்ற பொழுது வராத வெட்கம், நீங்கள் எடுத்த முடிவுகளான தலைமை செயலகம் இடமாற்றம், அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்றம், சமச்சீர் கல்வி, மக்கள்நல பணியாளர்கள் நீக்கம் போன்றவற்றை நீதி மன்றம் கண்டித்த பொழுது வராத வெட்கம், கூடங்குளம் அணு மின்நிலைய விவகாரத்தில் இரட்டை வேடம் கட்டும் பொழுது வராத வெட்கம்,  உங்களை ஏமாற்றி உங்களுடனே இருந்த கூட்டத்தை இப்பொழுதுதான் தெரிந்ததுபோல் கழற்றி விட்டு, இப்பொழுது பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கும் பொழுது வராத வெட்கம் இப்பொழுது வந்ததில் உங்களை மீண்டும் அரியணை எற்றியதற்கு தமிழக மக்கள் வெட்கப்படுகிறார்கள், வேதனை படுகிறார்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>இருந்தாலும் அம்மா இவ்வளவு நாள் கழித்து வெட்கப்பட்டதற்கு அவர் கட்சி உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருந்து பெஞ்சை உடையும் வரை தட்டலாம்.

hi hi hi அவ்வ்வ்

கும்மாச்சி said...

சி.பி. வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது said...

செருப்பால் அடிப்பது போன்ற கேள்விகள். அடப்போய்யா .........அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று தொடைத்து போடும் கூட்டம் இது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இதே அம்மாவும், விசய காந்து அண்ணாத்தேயும் மீண்டும் ஏதாவது ஒரு "எலக்கஷனில்" ஒன்றாக ஆகி விடுவார்கள். சூடு சொரணை அற்ற, தன்மானம் அற்ற, தன் பலம் பலவீனம் அறியாத தமிழர்களுக்கு இப்படித்தான் "தலைவர்கள்" வாய்ப்பார்கள்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மாணிக்கம். நீங்கள் சொல்வது சரியே, திரும்பி அவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பது நடந்தாலும் நடக்கலாம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.