Sunday 11 December 2011

பாரதி----130


தொலைக்காட்சிகளும் மற்றைய ஊடங்கங்களும் நடிகரின் பிறந்த நாளை இன்று கொண்டாடும் வேளையில் முண்டாசு கவியை நினைவு கொள்வோம்.

ட்விட்டரில் இன்று பாரதியை நினைவு கூர்ந்து ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் பற்றி கவலையில்லை.

உப்பிற்கும், பருப்பு புளிக்கும் என்னை பிச்சை எடுக்க வைக்காதே என்று பராசக்தியை கடியும் வாழ்க்கை நிலை. வருமையிலும் வற்றாத சமூக சிந்தனை. தமிழை போற்றிய அவர் மொழிப்பற்று, தொலை நோக்குப் பார்வை, சுதந்திர தாகம் என்று அவர் கவிகளில் எத்துனை வகை. தமிழ் மொழியில் அவர் எடுத்துக் கொண்ட சுதந்திரம் வியக்க வைக்கிறது. வெண்பா, விருத்தம், புதுக் கவிதை, வசனக்கவிதை என்று அவர் புனைந்தவை அத்தனையும் ரசிக்கக்கூடியவை. அவருடைய பிறந்த நாளில் அவர் கவிகளில் ஒன்றை நினைவு கொள்வோம்.
கவியின் “வேண்டுவன” இதோ


மனதிலுறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்படவேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்திலே உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஐயா.

MANO நாஞ்சில் மனோ said...

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே வாழ்க பாரதி புகழ்...!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதருமை சிட்டுக்குருவி அவன் .

கும்மாச்சி said...

மனோ, எஸ்.ரா வருகைக்கு நன்றி.

SURYAJEEVA said...

இன்று எனக்கு சிந்து நதியின்... பாடல் தான் நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சூர்யா.

ஹேமா said...

எதிலும் நிறைந்திருப்பவனை மறந்தால்தானே நினைக்க.என்றாலும் நன்றி உங்களுக்கு !

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஹேமா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை.
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.