Monday 19 December 2011

ஆத்தா கோபம்


முப்பது வருட நட்பு முறிந்ததா இல்லை, வெறும் நாடகமா புகைந்துகொண்டிருப்பது பத்திக்கிச்சா, இல்லை பத்திகிட்டது புகையுதா? ஒரு எழவும் புரியவில்லை.

உ.பி.சவும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் அம்மா கூண்டோடு தூக்கிவிட்டார்கள். இதற்கு காரணம் எல்லா அரசியல் விவகாரங்களிலும் கொன்னார்குடி குடும்ப ஆதிக்கம்தான் காரணமாம். ஆத்தாவுக்கு எல்லாமே லேட்டாதான் புரியும் போல இருக்கிறது. பெங்களுரு நீதிமன்றத்தில் அம்மாவுக்கு எதிராக தீர்ப்பு உறுதி எனும் பட்சத்தில் கட்சியையும் ஆட்சியையும் எப்படி கொன்னார்குடி கண்ட்ரோலில் கொண்டுவருவது என்பதை ரூம் போட்டு யோசிச்சதை உளவுத்துறை அம்மாவிடம் புட்டு புட்டு வச்சிட்டாங்களாம். அதனால் தான் இந்த ருத்திர(உக்கிர)தாண்டவம் என்பது கருத்து.

உளவுத்துறை டி.ஐ.ஜி. ராஜேந்திரனை திட்டமிட்டு அகற்றி பொன்மானிக்கவேலை கொண்டுவந்ததே அம்மையாரிடமிருந்து முக்கிய தகவல்களை வடிகட்டதானாம். ஆதலால் அம்மாவுக்கு எந்த முக்கிய விஷயங்களும் போய் சேரவில்லையாம். மேலும் கடந்த ஆறு மாதங்களாகவே அம்மாவுக்கு தெரியாமலே நிறைய அரசாங்க வேலைகளும், முடிவுகளும் எடுக்கப் பட்டதாக தெரிகிறது.

இதை விட இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.

டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசப்படுகிறது.

இதெல்லாம் உண்மையா? அல்லது கூடங்குளம், முல்லைபெரியாறு என்ற பிரச்சினைகளிருந்து மக்களை திசை திருப்பவா? என்ற ஐயமும் நம் மனதில் தோன்றுகிறது.

மேலும் சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.
1.       உ.பி.ச போயஸ் கார்டனை விட்டு விரட்டப் பாடுவாரா?
2.       மிடாஸ் சரக்கு டாஸ்மாக்குக்கு இன்னும் சப்ளை ஆகுமா?
3.       ஜெயா டிவி பொறுப்பாளராக இருக்கும் சசி உறவினர் வெளியேற்றப்படுவாரா?
4.       உ.பி.ச கூட்டம் அடித்த கொள்ளை கைப்பற்றப்படுமா?
 
பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

கோவி said...

ரத்தத்தின் ரத்தங்களே.. இனிய உடன் பிறப்புகளே.. கட்சி கொஞ்ச நாளைக்கு நல்ல இருக்க வாழ்த்துக்கள்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி கோவி.

Unknown said...

we will see see see..echo!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மாப்ள.

ஹேமா said...

ஆத்தா கோவம்....நல்லாருக்கு உங்க தலைப்பு !

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி , எஸ்.ரா

கும்மாச்சி said...

ஹேமா பாராட்டுக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்விற்கு நன்றி நண்பரே!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ராஜி said...

ஹா ஹா பொறுத்திருந்து பார்ப்போம். மீண்டும நாடகமா என்று

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ராஜி.

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில் செம கலக்கல்

கும்மாச்சி said...

நன்றி சி.பி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.