Tuesday 13 December 2011

கூடங்குளம் V/S முல்லைபெரியாறு


“தி வீக்” 11/12/2011 இதழில் மேற்கூறிய தலைப்பில் ஒரு கட்டுரை போட்டிருக்கிறார்கள். கூடங்குளம் விவகாரத்தில் அம்மா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூடங்குளம் அனுமின் உலை பூகம்பம் வந்தால் பாதுகாபாற்றது என்றைய மக்கள் கவலை நியாயமானதே ஆதலால் அதன் பாதுகாப்பை உறுதிப் படுத்தவேண்டும், என்றும் முல்லை பெரியாரின் பாது காப்பு உறுதியானது எந்த பூகம்பமும் ஒன்றும் செய்யாது, என்று இரு வேறு நிலைப்பாடு கடிதங்களில் தெரிவதால்தான் “தி வீக்” இந்தக் கட்டுரையை பிரசுரித்திருக்கிறது.

இதை எழுதிய ஆர். பிரசன்னன் இரும்பும், ஈயமும் கான்க்ரீட்டாலும் வைத்து புதிதாக கட்டப்பட்ட அணுஉலை உடையும், நூற்றி பதினைந்து வருடம் முன்பு சுண்ணாம்பு காரையால் கட்டப்பட்ட அணை உடையாது என்று நம்பும் முதலமைச்சரிடம் என்ன செய்ய முடியும்? என்று கேட்டிருக்கிறார்.

ஏற்கனவே முல்லைபெரியாறு பிரச்சினை திட்டமிட்டு உருவாகப்பட்டதோ என்ற நம் ஐயம் வலுப்படுகிறது. நமக்கு மின்சாரமும் தேவை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயமும் தேவை. தமிழ்நாடு அரசு தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமிது. அப்துல்கலாம் கூடங்குளம் சென்று அதிகாரிகளை சந்தித்து ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையில் கல்லணையின் உறுதியை எடுத்துக்காட்டியதை கேலி செய்த போராட்டக்கார்கள் சற்று சிந்திக்க வேண்டும். நம் வாயிலிருந்தே வார்த்தைகளை வாங்கி மத்திய அரசும் கேரளா அரசும் நாடகமாடுகின்றன.

கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டத்தை  கண்டிப்பாக நான் ஏற்கமுடியாது. அதன் உள்நோக்கம் நமக்கு கொஞ்சமும் தண்ணீர் தரக்கூடாது என்பதே.  

கேரளாவில் முல்லைபெரியாறு அருகில் உள்ள “வல்லக்கடாவு” மக்களின் கவலையும், கூடங்குளம் மக்களின் கவலையும் நியாயமானதே. இவர்களின் பயம் இயற்கைப் பேரழிவில் தங்களது உயிருக்கு உத்தரவாதம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் நியாயமான பயத்தைப் போக்க வேண்டிய அரசுகள் அதை விட்டு இதை  அரசியல் கட்சிகள் தங்களின் சொந்த லாபத்திற்காக மக்களை தூண்டிவிட்டு குளிர் காய்கிறார்கள் என்பது நித்திலமான உண்மை.

நாட்டின் இன்றைய தேவை தொலை நோக்கு பார்வை, சுயநலமில்லாத அரசியால் தலைவர்கள்.

இன்னறைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது. அணை பாதுக்காப்பாகவே உள்ளது என்பதை  கேரளா அரசின் வழக்கறிஞர் வாயாலே சொல்லப்பட்டிருக்கிறது.

இரு அரசுகளும் மக்களின் நலனை அறிந்து உரிய முடிவெடுக்கும் நேரம் இது. புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் கிடைக்காது என்பது ஊரறிந்த உண்மை, புதிய அணைக்கு அவசியமும் இல்லை. முல்லை பெரியாறு உடைந்தால் நீர் இடுக்கியை போய் சேரும் என்பது கருவிலிருக்கும் குழந்தைக்கும் தெரியும்.

ஆதலால் ஊமன் சேன்டியும், அச்சுதானந்தனும் வேறே எதாவது வழியை பின்பற்றி இடை தேர்தலை சந்திக்கலாம். 

தமிழ் நாட்டில் உள்ள மலையாளிகளின் எண்ணிக்கையும், தமிழனின் கொந்தளிப்பும் அவர்களுக்கு தெரிந்ததே.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையா சொன்னீங்க.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
This comment has been removed by the author.
கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

மன்மதக்குஞ்சு said...

தமிழ் நாட்டின் வளர்ச்சியின் பொறாமையின் திட்டமிட்ட வெளிப்பாடே.
"மண்டன்" மளையாளி தான் அழிந்தாலும் பரவாயில்லை. தமிழன் வளரக்கூடாது என தீவிரமாக இருக்கின்றனர். நம் துரதிஷ்டம் மல்லு அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே பக்கம்; ஆனால் அம்மா சற்று அரவணைத்தால் அதை முறியடிக்கலாம். இல்லையேல் தென் தமிழ் நாடு மெல்ல சாகும்.

மகேந்திரன் said...

உச்சநீதி மன்றத்தின் மனு தள்ளுபடி நடவடிக்கை
மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நெல்லி. மூர்த்தி said...

நீங்கள் அணு உலை ஆதரவாளர் போலும். அதான் நாசுக்காய் முல்லை பெரியாறுடன் கூடங்குளத்தையும் இணைத்து செய்தியாய் பதிவிட்டுள்ளீர்கள். நீரின் சக்தியும், அணுவின் சக்தியும் ஒன்றல்ல நீரினால் எழும்பும் விரும்பத்தகாத விளைவு ஒரு முறை தான். ஆனால் அணுவினால் எழும் விரும்பத்தகாத விளைவு பல்லாயிரம் ஆண்டுகள் என்பதை அணுவிஞ்சானிகளே ஒப்புகொள்ளும் உண்மை! அணுக்கழிவுகளை என்ன செய்வது என கனடா, இங்கிலாந்து முதற்கொண்டு மூளையைக்கசக்கிக் கொள்வது எப்படி நம் இந்திய ஊடகங்களின் கண்களுக்கு மட்டும் வசதியாக தென்படுவதில்லை என்பது தான் புரியாத புதிராக உள்ளது. அவர்களின் கழிவினை நாசுக்காக, இந்தியாவின் அணு உலை மூலப்பொருள் என வரும்காலத்தில் தலையில் கட்டிவிட்டாலும் ஆச்சரியத்திற்கில்லை. காண்க: http://www.theengineer.co.uk/opinion/comment/good-riddance-to-bad-rubbish/1011164.article

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.