Friday 9 December 2011

வாயே திறக்காதவன் தளபதி


தமிழர்கள் திருப்பி அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை ............ரமேஷ் சென்னிதாலா.
அப்பா என்ன ஒரு கணிப்பு, தமிழனை இவரைதவிர யாரும் சரியா எடை போட முடியாது.

தளபதி என்பவன் படையை காக்கிறவன், வழி நடத்துகிறவன் . தமிழனுக்காக வாயே திறக்காதவன் எல்லாம் தளபதி அல்ல......அப்பா என்ன ஒரு கொலவெறி ........ட்விட்டரில் பிரஷாந்த்.

முல்லை பெரியாறு விவகாரத்தில் ஆலுக்காஸ அடிச்சா ஒட்டு மொத்த கேரளமும் முல்லை பெரியாறில் உச்சா போவுங்கிறான் ஒரு நாதாரி மல்லு.

ஒஸ்தி படத்தை சிலபேர் நாஸ்திங்கிறான், சில பேர் ஒஸ்திங்காறான், பேரு ஒஸ்தி தானேப்பா.....................போங்கப்பு ஒரே குழப்புறீங்க.
முல்லை பெரியாறு விவகாரம், நாளை தி.மு.க பொதுக்குழு கூடுகிறது. அவனுங்களை எதிர்த்து முடிவெடுக்காதீங்க இப்பொழுதுதான் கையில் காலில் விழுந்து ஜாமீன் கிடைத்திருக்கு.
இனி என்னை யாராவது தாக்கினால் ஹசாரே தான் பொறுப்பு.........பவார்.
இத்தாலி ஆத்தா ஆள் செட் பண்ணுதான் உஷாரப்பு.
ஐயப்பனை தரிசிக்க ஏன் சபரிமலைக்கு போகணும், மகாலிங்கபுரத்துக்கு போனா தரிசிக்கலாமே, ஒ இவர் வேறேயோ?
கேப்டன் தோனியின் உயிர்க்கு பயங்கரவாதிகள் குறி. ஒரு வேளை தீவிரவாதிகளை  போட்டு தள்ளர “அந்த கேப்டன்” இவர்தான்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்களோ.
“DAM” AGE ஆனா DAMAGE ஆகிவிடும் என்ற அரிய பொறியியல் விதியை கண்டு பிடித்த கேரள அரசியல்வாதிகளுக்கு இந்த வருட நோபல் பரிசு “அடி போன ஆண்டிக்கோப்பை”.

என் மீது உள்ள குற்றம் நிரூபணமானால் எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொள்வேன்...............ஸ்டாலின்
இது நல்லா இருக்கே, என்ன சமயபுரத்து மாரியம்மனுக்கு அலகு குத்திக்குவீங்கதானே.
கிரிக்கெட் உலகில் சச்சின் கடவுள் என்றால், சேவாக் ரஜினிகாந்த்..........வடஇந்திய ஊடகங்கள் புகழாரம்.
கடவுளையும் ரஜினியையும் சும்மா வுடுங்கப்பு.
இரண்டாவது மனைவி கொடுத்த புகாரின் பேரில் அமைச்சர் பரஞ்சோதி மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு.
போலீஸ்காரங்க இரண்டாவது மனைவி என்றவுடன் அந்தக் கட்சின்னு நினைச்சு புகாரை வாங்கிட்டாங்களோ.

தமிழகம் முழுவதும் 12ம் தேதி முல்லை பெரியாறு விவகாரத்திற்காக உண்ணாவிரதம்..............தி.மு.க செயற்குழு முடிவு
ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா.......................
முல்லை பெரியாறில் புதிய அணைவேண்டும்..................அச்சுதானந்தன்
“பிரவம்” இடை தேர்தல் முடிந்தவுடன் அணை வேண்டாம்னா சொல்லிக்க ஒருதடவை என்னா நூறு தடவை சொல்லிக்க.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

Unknown said...

மாப்ள எல்லாம் அருமை..கண்டு களித்தோம்..என்ன இருந்தாலும் பவாருது டாப்பு!

கும்மாச்சி said...

மாப்ள நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா பவாருக்கு கிடைச்சா மாதிரி இன்னும் நிறைய பேருக்கு கிடைக்கணும்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

மின்சாரம் தயாரிக்கதான் புதிய அணையை கட்டுகிறார்கள், அல்லாமல் ஆபத்து ஒன்றுமில்லைன்னுதான் உண்மையான மலையாளிகள் சொல்லுகிறார்கள்..!!!

கும்மாச்சி said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மனோ.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசத்தல்.

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

கமெண்ட் கலக்கல்

கும்மாச்சி said...

சி.பி. நன்றி

கும்மாச்சி said...

நன்றி சி.பி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.