Sunday 18 December 2011

கலக்கல் காக்டெயில் -52


ஒன்றுபட்டால்

முல்லை பெரியாறு பிரச்சினைக்காக சட்டசபையை விரைவில் கூட்டி ஒரு நல்ல தீர்மானம் போட்டதற்கு அம்மாவுக்கு ஒரு சபாஷ். அம்மா எப்பொழுதாவது ஒரு நல்ல காரியம் செய்வார்கள் ஆனால் அது எப்பொழுது? எப்படி வரும்? என்று தெரியாது. போன ஆட்சியில் மழைநீர் சேகரிப்பும் வீராணமும். இந்த முறை முல்லை பெரியாரின் உயரத்தை 142 லிருந்து 152 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப் போகிறார்கள். எல்லா கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நமது ஒற்றுமையை கேரளத்திற்கு தெரிவித்திருக்கிறோம். சேட்டன்களுக்கு சரியான ஆப்பு. இதை அராய்ச்சி செய்ய ஒரு குழு நியமிக்கப்படும். அவர்கள் 142 பிரச்சினை இல்லை 152 அடிக்கு உயர்த்த வல்லுனர்களின் பரிந்துரையை எதிர் நோக்குகிறோம் என்று தீர்ப்பு வர வேண்டுவோம்.

அப்துல்கலாமின் நதிகளையும், அணைகளையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற யோசனை நல்லதே, அதற்கும் யாராவது நீதி மன்றத்தி “PIL” போட்டால் நன்றாக இருக்கும்.

விளம்பரங்கள்

விளம்பரங்களின் பெயரில் தொலைக்காட்சிகள் நல்லாவே மக்களுக்கு பூ சுத்துகிறார்கள். அந்த வகையில் சமீபகால விளம்பரம் கல்யாண் ஜுவேல்லேர்ஸ். தங்கத்துக்கு விலை பொறிக்கப்படவேண்டும் என்பதே. கேக்குறவன் கேணையன் என்றால் கேப்பில கடா வெட்டுவார்கள். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உலக சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. நம்மூர் கடைகள் செய்கூலி, சேதாரத்தில் தான் கல்லா கட்டுகிறார்கள். மேலும் கேரட்டில் அவர்களது தில்லுமுல்லு நிறையவே உண்டு. தங்கம் வாங்க வேண்டுமெனில் 24 காரட் வாங்குங்கள் அதில் தில்லுமுல்லு நிறைய செய்ய முடியாது.

புதிய தலைமுறை
புதிய தலைமுறை தொலைக்காட்சி சமீபத்திய தமிழ்நாட்டின் பரபரப்பு என்றால் மிகையாகாது. இருபத்திநாலுமணி நேர செய்தி தொலைகாட்சிகளில் இது முன்னிலை வகிக்கிறது. மானிட்டர்  பார்த்தே செய்து வாசித்து, கட்சி சார்ந்த ஒரு தலை பட்ச செய்திகளையே பார்த்துக்கொண்டிருந்த நமக்கு, புதிய தலைமுறை சரியான நேரத்தில் நுழைந்து கலக்குகிறார்கள். சமீபத்தில் ரசித்தது லோக்பால் பற்றிய ஒரு நேர்காணல்.

ரசித்த கவிதை
குற்ற நெஞ்சு குறுகுறுக்கும்-அதில்
குறைகள் பல உண்டு- எனைப்
பெற்றவள் செய்த சமையல்தான்-அதில்
பிழைகள் கண்டதுண்டு-ருசி
அற்றுப்போன அமெரிக்க வாழ்வில்
பற்றே இல்லையடி- ஒரு
வற்றக்குழம்பு அதுபோதும்- அன்னைக்
கைமணம் அதில் வேணும்.

-------------------------ரவி





இந்த வார ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

கோகுல் said...

ஒன்று பட்டால்-நல்ல விசயம்தான்,
இப்போதெல்லாம் புளியைப்பாத்து சூடு போட்டு கொந்து போல பு,த பாத்து மத செய்தி சானல்கள் செய்கின்றன,ஆனா பாக்க கடுப்பு தான் வருது.
/
இந்த வாரம் ஜொள்ளு கொஞ்சம் கொறஞ்ச மாதிரி இருக்கு!

மகேந்திரன் said...

கலக்கல் காக்டெயில்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கலக்கல்.

பகிர்வுக்கு நன்றி .

வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஒன்

பாஸ், நீங்க போஸ்ட் போட்டா மெயில் பண்ணுங்க cpsenthilkumar20@gmail.com

கோவி said...

எங்கதான் இப்படி போட்டோ கெடைக்குதோ.. புதிய தலைமுறை நல்லாவே இருக்கு,.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.