Tuesday 20 December 2011

இரண்டு வண்டி பத்தாதே


சசி இரண்டு ஸ்கார்பியோ வேன்களில் சாமான்களை ஏற்றி போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றம்.
இரண்டு வண்டி பத்தாதே.

சேப்பல் ஒரு பைத்தியக்காரன், டிராவிட் ஒரு பயந்தாங்கொள்ளி...........கங்குலி சொன்னது
கவாஸ்கர் ஒரு காவாளி, தோனி ஒரு மொள்ளமாரி, டெண்டுல்கர் ஒரு முடிச்சவிக்கி, சேவாக் ஒரு டுபாக்கூரு, கம்பீர் ஒரு பேமானி, ...............கங்குலி சொல்லாதது.

நாளை சனி பெயர்ச்சி, இன்று சசி பெயர்ச்சி...........எஸ்.வீ. சேகர்
எப்படி இருந்தாலும் இவருக்கு உண்டகட்டிதான்.

இதே போல் தொடர்ந்து நடந்தால் என் புல் சப்போர்ட் கிடைக்கும்............மன்னார்குடி மாபியா நீக்கம் பின்பு சுப்ரமணிய சாமீ பேச்சு.
மன்னார்குடி மாபியா கிட்டேயும் மகளிர் அணி இருக்கும், அப்புறம் காடு மேடெல்லாம் பார்க்கவேண்டி வரும் எதுக்கும் கண்ணை மூடிக்கிட்டே இருங்க.

ஜெ. வும் கருணாநிதியும் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊழல்வாதிகள்............கேப்டன்.
எங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தால் நாங்களும் வரலாறு படைப்போம்.

முல்லைபெரியாறு சட்டசபை சிறப்பு கூட்டத்திற்கு நான் தாமதமாக வந்ததற்கு போக்குவரத்து நெரிசலே காரணம்...............கேப்டன்.
யோவ் கப்சா விடாதே, டாஸ்மாக் திறக்க நேரமாச்சுன்னு சொல்லு..........கூட இருந்த டாஸ்மாக் கபாலி.

நாளை கட்டிங் கிடையாது............கேரளாவை எதிர்த்து முடிதிருத்துவோர் வேலை நிறுத்தம்.
தெளிவா சொல்லுங்கப்பு, ஜனங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு டாஸ்மாக்ல அலைமோதி அடிச்சுகிறாங்க.

ஆட்டம் பாட்டத்துடன் நித்யானந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.
சாமீ கேமராகாரன்களை உள்ளே விடாதீங்க.

ரஷ்யாவில் கீதைக்கு தடை.
போட்டிக்கு நாம் வோட்காவை தடை செய்வோம்.

சென்னையில் அன்னா ஹசாரே பேச்சு.......................
அணில் எங்கே போனார்பா?

கேரளாவில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்...................அம்மண சாண்டி.
தமிழ்நாட்டில் டீ கடைகளும், பாய்லர்களும், மாஸ்டர்களும் பாதுகாப்பாக உள்ளனர், எங்களுக்கு டீ தாண்டா சாப்பாடே தமிழனா கொக்கா?

சசிகலா குடும்பத்தோடு கட்சியிலிருந்து நீக்கம்....................செட்டப்பாம்.
அடுத்த கட்ட பெங்களூரு நீதி மன்றத்தில் அடுத்த மனு தாக்கல் செய்யும் போது உண்மை வெளிப்படுமாம்.............எல்லாத்துக்கும் மொட்டைதான் அறிவுரையாம்.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

Philosophy Prabhakaran said...

மொத்தத்தில் ஒரு அரசியல்வாதி விடாம பூரா பயலுகளையும் துப்புறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

Unknown said...

யோவ் மாப்ள எதாவது சிரிப்பு கேஸட் ரிலீஸ் பண்ண போரீறா ஹேஹே

CS. Mohan Kumar said...

Both comments about Captain was very good.

சி.பி.செந்தில்குமார் said...

நாங்க தான் சின்னபசங்க அனுஷ்கா மாதிரி குஜ்லிங்க ஃபோட்டோவை பிலாக்ல போடறோம், நீங்க எல்லாம் பெரிய மனுதங்க, இப்படி செய்யலாமா? ஹி ஹி

Admin said...

தட்டிவிட்டவை அனைத்தும் ரச்க்கும்படியிருந்தது..

வரவை எதிர்பார்க்கிறேன்..

செத்தபின்புதான் தெரிந்தது..

ராஜி said...

உங்க கமெண்ட் சூப்பர்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.