Wednesday 21 December 2011

கலக்கல் காக்டெயில் -53


ஒன்றும் தெரியாத பாப்பா

இன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் “ஒரு குடும்பத்துக்கு என்று ஆட்சி செய்யாமல் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை குடும்பங்களுக்கும் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அரசியலில் இன்றைக்கு ஒரு மறுமலர்ச்சியை, ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி இருக்கிறார். ஜெயலலிதா எடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் இன்றைக்கு மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். உங்களுடைய விசுவாசிகள் என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற உறுதிமொழியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.

இவருக்கு இப்பொழுதுதான் குரல் வந்திருக்கிறது. அம்மா ஒரு குடும்பத்திற்காக ஆட்சி செய்த பொழுது பொத்திக்கிட்டு சும்மா இருந்துட்டு இப்பொழுது குரல் விடுபவரின் வீரம் “கண்கள் பணித்தது, வயிறு புளித்தது, இன்னும் எங்கெங்கோ நீர்த்தது என்று சொல்லும் பொழுது தெரிய வரும்”.

இதுவரை ஏதோ நடந்த குளறுபடிகளுக்கு அந்த குடும்பம்தான் காரணம் போலவும், இனிமே அப்படியே நல்லாட்சி செய்வது போலவும் சில ஊடகங்கள் சப்பை கட்டு கட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

எல்லாம் பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் தெரிந்து போகும்.

கூடலூர் போலிஸ் நடவடிக்கை

கூடலூரில் இன்று பொதுமக்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் போலிஸ் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. முல்லை பெரியாறு பிரச்சினையை இரு மாநிலங்களும் ஊதிவிட்டு இப்பொழுது நடவடிக்கை எடுப்பது கண்கெட்ட பின் சூர்யா நமஸ்காரம் என்று சொல்வார்களே அது போல் உள்ளது.

பிறந்த நாள்

எல்லா தொலைக்காட்சிகளும் அவரின் பிறந்தநாளை கொண்டாடி கல்லா கட்டிய பொழுது “மிகவும் எளிமையாக தன் பிறந்த நாளை கொண்டாடினாராம்”. மொத்தத்தில் அவரை உசுப்பிவிட்டு காசு பண்ண ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கிறது.

கவிதை.

(மீள் பதிவு)

கால்விரல்களின் நகத்தை வெட்ட
காலை மடக்கி பாதம் தொட,
சாக்சும், ஷூ லேசும் கட்ட
கஐகர்ணம் போட வைக்கிறாயே!

ரேஷன் கடை க்யூவானாலும்
சினிமா டிக்கெட் எடுக்கும்
வரிசையிலும்
பேருந்து ஸ்டான்டிங்கில்
பயணிக்கும் போதும்
யோவ்! உனக்கு முன்னால
எவ்….. வளவு கேப் என பிறர்
முறைக்கப் காரணம் நீ தானே!

மல்லாந்து படுத்தால் மலை மாதிரியும்
பக்கவாட்டில் படுத்தால் அருகில்
பாப்பாவாகி
குப்புறப்படுக்க விடாமல்
கொடுமை செய்து
குலுங்கிச் சிரித்தால் பிறரையும்
குலுங்க வைக்கிறாயே!
இருப்பினும் உன்னால்
எனக்கு உதவிதான்,
இருக்கும் இடத்தில் உன்னை
டேபிளாகவும்,
இரு கைகளுக்கு ரெஸ்ட் ஸ்டாண்ட்
ஆகவும்,
ஹெல்மெட்டுக்கு நல்ல
ஷெல்பாகவும்….
லௌவ் யூ ஸோ மச் தொப்பை!.

எழுதியது யார் தெரியவில்லை?
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.


இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

Advocate P.R.Jayarajan said...

//இதுவரை ஏதோ நடந்த குளறுபடிகளுக்கு அந்த குடும்பம்தான் காரணம் போலவும், இனிமே அப்படியே நல்லாட்சி செய்வது போலவும் சில ஊடகங்கள் சப்பை கட்டு கட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.//

மிகபெரிய சதி கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஸார்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

சி.பி.செந்தில்குமார் said...

தினமணில உங்களை பற்றித்தான் பர பரப்பா பேச்சு

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.