Tuesday 27 December 2011

லோக்பால் அரசியல்


இன்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி திருத்தப்பட்ட லோக்பால் வரைவு மசோதாவை தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் இன்று நாள் முழுவதும் தொடர்ந்தது.
இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பா.ஜ.க. யின் சுஷ்மா ஸ்வராஜ் எதிர் பார்த்தது போல் தங்கள் முன்கூட்டியே தீர்மானித்த விவாதங்களை எடுத்து வைத்தார். மசோதாவில் உள்ள தீர்மானங்களில் சில மாநில உரிமைகளை பறிப்பதாக இருக்கிறது. மேலும் இதில் இட ஒதுக்கீடு தேவையற்றது என்பது அவர்களின் பிரதான வாதம். மேலும் அவர்களது பேச்சில் குறைந்தது நாற்பது திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சிகளோ தங்கள் பங்கிற்கு ஒரு பத்து திருத்தம் முன் வைத்திருக்கிறார்கள்.

பின்னர் பேசிய கபில் சிபல் மசோதாவை எதிர்க்கட்சி சரியாக படிக்காமல் விவாதம் செய்கிறார்கள் என்ற வாதிட பின்னர் குழாயடி சண்டையாக மாறியதை இன்று என்.டி.டி.வி பார்த்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். இதற்கு நடுவில் ஒரு கூட்டம் எப்பொழுதும் எழுந்து நின்று கத்திக் கொண்டு இருந்தனர்.

சி.பி. ஐ யை இந்த வரம்புக்குள் கொண்டுவருவதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

சபாநாயகர் மீரா குமாரோ “நூறு ரூபாய் வாங்கியது” போல் சிரித்துக் கொண்டே எல்லோரையும் அமைதியாக அமருமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கெல்லாம் மேலாக நம்ம “சிங்கு” கம்மென்று இருந்தார்.

ஆளும் கட்சிக்கு வருகின்ற ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்குள் இந்த மசோதாவை நிறைவேற்றவேண்டும் என்ற துடிப்பு, எதிர் கட்சிகளுக்கோ இதை எதிர்த்தே தீருவது என்பது, ஆளும் கட்சிக்கோ நாங்கள் ஊழலை எதிர்க்க சட்டம் கொண்டு வந்தோம் மற்ற கட்சிகள் நிறைவேற்றவில்லை என்ற வாதத்தோடு தேர்தலை சந்திக்கலாம் என்ற எண்ணம்.

மொத்தத்தில் இவர்கள் யாவர்க்கும் ஊழலை ஒழிக்க இந்த மசோதா கொண்டு வருவதில் அக்கறை இல்லைபோல் தோன்றுகிறது. எல்லோரும் இதை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

போதாகுறைக்கு அன்னா ஹசாரே திட்டமிட்டபடி மும்பையில் தன் உண்ணாவிரதத்தை துவங்கினார். எதிர் பார்த்த அளவு கூட்டம் இல்லை என்பது மக்கள் இவர் மீது வைத்திருந்த மதிப்பு குறைவதுபோல் உள்ளது. அவர் பேச்சில் இப்பொழுது வீசும் அரசியல்நெடி இந்தப் போராட்டத்தை வலுவிழக்க செய்கிறது. மேலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அமைப்பை சற்று அதிகமாகவே நிர்ப்பந்திப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. கடைசியாக வந்த செய்திப்படி அவருடைய உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் முடியும் வரை உண்ணாவிரதத்தை கைவிட்டு அடுத்த கட்ட போராட்டம் தேவையென்றால் அதை பற்றி யோசிக்கலாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து.

ஊழலை ஒழிக்க  ஒரு கடுமையான சட்டம் கொண்டுவரவேண்டும் என்பதில் மக்களின் மத்தியில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இவர்கள் செய்யும் அலம்பலை பார்த்தால் இதை எப்படியும் வரவிடாமலோ அல்லது வந்தால் வேறு ஒரு அமைப்பு சம்பாதிப்பதற்கு வழிவகை செய்வது போல் உள்ளது.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

துரைடேனியல் said...

Unmaithan Sago. Masotha vai kaattilum ivargalin arasiyal than asingamaga ullathu.

மன்மதக்குஞ்சு said...

"மொத்தத்தில் இவர்கள் யாவர்க்கும் ஊழலை ஒழிக்க இந்த மசோதா கொண்டு வருவதில் அக்கறை இல்லைபோல் தோன்றுகிறது. எல்லோரும் இதை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்".
சரியாக சொன்னீர்கள்.....

Unknown said...

மாப்ள பார்ப்போம் எந்த பக்கமா திருப்புராங்கன்னு!

மாலதி said...

அரசியல் பண்ணிக்கொண்டிருக்கிறார்களசரியாக சொன்னீர்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ஓக்கே ரைட்டு

SURYAJEEVA said...

ஊழலை ஒழிக்க சட்டம் என்பது, திருடனை வீட்டுக்கு காவலுக்கு வைப்பது போல

Anonymous said...

because our politicians can live without food, but cannot live without corruption

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.