Monday 2 December 2013

தமிழகத்தின் இருண்டகாலம்

ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. இரு கழகங்களும் தமிழகத்தை இருளில் மூழ்கடித்துவிட்டு இப்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டு ஒட்டு வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர்.

2001 ம் ஆண்டிலிருந்தே இரு கழகங்களும் உருப்படியான திட்டம் எதுவும் தீட்டவில்லை என்பதே நித்திலமான உண்மை. ஓட்டிற்காக இலவச மிக்சி, கிரைண்டர். டி.வி, மடிக்கணினி என்று கொடுத்து பீசை பிடுங்கியதை ஒருவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. போதாத குறைக்கு மக்கள் மனதையும் இருட்டடிக்க டாஸ்மாக் உற்பத்தியை அதிகப்படுத்தியாகிவிட்டது.

2001 ம் ஆண்டிலிருந்த மின் தேவை 7000 மெகாவாட் தற்பொழுது அது 11000 மெகாவாட் வரை உயர்ந்து நிற்கிறது. ஆனால் உற்பத்திதிறனோ இன்னும் 7000 மெகாவாட்டை தாண்டவில்லை. அண்டை மாநிலங்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை உற்பத்தி திறனை 2000 மெகாவாட் ஆக உயர்த்தி இருக்கிறது.

அண்டை மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கான வழித்தடங்களையும் மேம்படுத்தவில்லை. சரி அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் இரண்டாயிரம் மெகாவாட் தேவை அதிகரிக்கும், அதற்கும் ஒன்றும் செய்ததாக தெரியவில்லை, இந்த அழகில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றப்போகிறேன் என்று சட்டசபையில் அறிவித்துவிட்டு பெஞ்ச் தட்டுகிறார்கள்.

பண்டைய காலத்தில் தமிழக நிலங்களை கடல் கடல் சார்ந்த இடம், மலை மலையை சார்ந்த இடம் என்றெல்லாம் வரையறுத்து முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை என்று ஐந்து வகையாக பிரித்தார்கள். இப்பொழுது எல்லாம் ஒன்றாகிவிட்டது.

தற்போதைய தமிழகத்தை இருளும் இருள் சார்ந்த இடம் என்று ஒரே வரையறைக்குள் அடைத்த பெருமை இத்தனை வருடங்களாக நல்லாட்சி புரிந்த இரண்டு கழகங்களையே சாரும்.

வாழ்க எங்கள் அம்மா, ஐயா புகழ்.

Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயோ... அய்யோ... அய்யய்யோ... ஐஅய்ய்ய்ய்யய்யோயோயோயோயோ..........

திண்டுக்கல் தனபாலன் said...

கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

நன்றி

ராஜி said...

தற்போதைய தமிழகத்தை இருளும் இருள் சார்ந்த இடம்
>>
அப்படின்னா என்ன பேர் வைக்கலாம்!? எருக்கு, அரளின்னு வைக்கலாமா!?

கும்மாச்சி said...

இருட்டுக்கு என்ன பெயர் வைத்தால் என்ன?

வருகைக்கு நன்றி, ராஜி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த ஆட்சியில இதை எதிர்த்து சொல்வதற்குகூட சரியா எதிர்கட்சி இல்லாத வேதனை...

என்று சகஜ நிலைக்கு வருமோ...

கும்மாச்சி said...

சௌந்தர் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

நல்லா சொன்னீங்க! இருளும் இருள் சார்ந்த இடம்! நல்ல உதாரணம்! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீங்க இன்னும் தொடர்ந்து அதே போல எழுதிட்டு வர்ரது ரொம்ப சந்தோசமா இருக்கு.....!

நம்பள்கி said...

TNEB -பற்றி போட்டது பெஸ்ட்!
இவனுங்க கிட்ட எவனும் வால ஆட்டமுடியாது!
தமிழ்மணம் +1

அருணா செல்வம் said...

யாராவது ஒளி ஏத்த வருவாங்களா....?

கும்மாச்சி said...

பன்னிகுட்டி ராமசாமி வெகுநாட்களுக்குப் பிறகு வருகை தந்துள்ளீர்கள் நன்றி.

கும்மாச்சி said...

நம்பள்கி நன்றி.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.