Saturday 15 March 2014

டீ வித் முனியம்மா-------பார்ட் 1

கொண்டித்தோப்பில் அந்த நான்கு சாலையும் சந்திக்குமிடம், மேக்கால செல்வம் பயக்கடை, நாடார் மளிகைக்கடை தாண்டி ஓரமா கீதே அதான் நம்ம அப்புகுட்டன் நாயரின் டீக்கடை, அதன் வாசலில் பெஞ்ச் போட்டு இருக்கே அதில் அமர்ந்திருப்பவர்கள்.................
கரீம் பாய் எதிர் கடையில் மட்டன் ஸ்டால் வச்சிகிராறு..
அப்பால பாணலிங்கம் பேப்பர் கட  ஓனரு கிறாரு..
பொட்டிக்கடை  லோகுவும் நாயை இட்டாந்து  குந்திகினாரு.
மளிகைக்கடை நாடார் இன்னும் வரல.
செல்வம் பயக்கடையை வுட்டு பெஞ்சில குந்திகிராறு. வியாவரத்தை தேன்மொயி பாத்துகிணுது.......

கரீம்பாய்: யோவ் மீச (நாயரின் செல்லப் பெயர்) எங்க  முனியம்மாவைக் காணோம்.

வரசமயமாயீ............நாயர்

முனியம்மா கையில் பேப்பருடன்..............யோவ் மீச ஸ்டாங்கா ஒரு டீ,.........கடை பையனிடம் டேய் கொமாரு............சேர் போடுடா..........

செல்வம்: இன்னா மினிம்மா இன்னா நூசு........

ஐயே  இருடா.........டீ வர்ட்டும்.
பாய் டீ சொல்லல, செல்வம் இந்நாட வயக்கம் போல சைனா டீயா...........

முனியம்மா பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பிக்கிறாள்........

கேப்டன் பிரச்சாரத்தில் குதித்தார்..........தே மு.தி. க. வின் தலிவரு இன்று திருவள்ளூரில் பிரச்சாரத்தை தொடங்கினார்........முன்னதாக அவரை தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.......

ஐயே மீட்டிங்குல இன்னா பேசினாரு அத்த போட்டுகிறானா?

இரு நாடாரே இன்னா அவசரம், படிக்கிறன் கேளு....மக்கழே எங்களுக்கு ஒரு சான்சு கொடுங்க.......அந்தம்மா தமிழக மிளிருதுங்குறாங்க..........எங்க மிரளுது எங்க வூட்டுலேயே கரண்டு இல்ல........அஹாங்.........தோடா

போலிசு சரியில்ல..........லஞ்சம் வாங்குறான்........நான் முன்ன பின்னதான் பேசுவேன் நீங்கதான் மக்கழே எல்லாத்தையும் ஓட்ட வச்சுக்கணும்.

இன்னா இவரு காலையிலேயே மப்பு ஆயிட்டாரா? இவரு என்னிக்கி சரியா பேசிகிராறு.........இவரு இன்னா தொகுதி பங்கீடு இன்னும் முடிக்காம கெளம்பிட்டாரு.....மருத்துவரு கட்சி ஆளுங்க தொகுதிப்பக்கம் மப்புலகூட போமாட்டாரு போல..அப்புறம் இன்னா கூட்டணி------கூமட்டனின்னுகினு............

அத்த விடு வேற இன்னா போட்டுக்கிறான்...கரீம் பாய்

அயகிரி போயி ரஜினிய பாத்துகிராறாறு......
இன்னாவாம்...............
புது கட்சி ஆரம்பிக்கறாப்பலையா?
தெரில்லயே...................
ஆனா அப்பா கட்சிக்கி எதிரா உள்குத்து குத்துவாறு..........

ஐயே அப்பாலிக்கா சினிமா நூசு இன்னா போட்டுக்கிறான்...........பாணலிங்கம்

நமீதா பிரச்சாரத்துல குதிக்குதாம்.

ஐயே தோ பார்டா..............ஏண்டா செல்வம் நீ ஏண்டா வாயப் பொளக்குற...அஞ்சலயாண்ட சொல்லவா?

மினிம்மா மலேசியாகாரன் பிளேனு கெடச்சிதா?

அயே அத்த இன்னும் தேடின்னுகிரானுங்க, நம்ம மெரீனா பீச்சாண்ட கூட தேடி பாத்துகிரானுங்க இன்னும் கெடக்கிலயாம்...........எங்கியோ பிளேன தாராந்துகிரானுங்க............

அப்பாலிக்கா இன்னா நூசு, வேற ஏதோ வேலைக்கி போற பொம்பளயாண்ட எவனோ நாலு பசங்க வேலைய காமிச்சு கொன்னுகிரானுங்க...........மவனே இவனுக கண்டி என்கிட்ட மாட்டுனா........மவனே அறுத்து குடுத்துருவேன்..............தோ இப்பதான் நா வரசொல்ல ஒரு பேமானி ஈன்னு பல்லகாட்டிகினு சைடால வந்தான்..........
புடிச்சேன் பாரு ஒரு பிடி...............மவனே கைய கவட்டைல உட்டுகினு நோன்டிகினே போயிட்டான்...........

அத்த விடு முனியம்மா வேறென்னா நூசு............

யோவ் விடுயா வேல கீது கோயிலு தொறக்கிற நேரம், பூக்கடயாண்ட முனியம்மா இல்லையேன்னு அல்லாம் மெர்சல் ஆயிடும். அப்பால அடுத்த  தபா டீ குடிக்க சொல்ல படிக்கிறேன்.........இன்னா வர்ட்டா...........யோவ் மீச டீ கணக்குல எய்திக்கோ..........

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆரம்பமே சூப்பரா கீது....!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

கும்மாச்சி said...

சந்தர் சிங் வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.