Wednesday 7 December 2011

முல்லை பெரியாறும் மூழ்கிப்போன பெண்டாட்டி நகைகளும்


தற்பொழுது எல்லா ஊடகங்களிலும் அகப்பட்டு சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் முல்லை பெரியாறு அணையின் ரிஷிமூலத்தையும் அதனை தொடர்ந்த சச்சரவுகளும் பற்றியதே இந்தப் பதிவு.

இந்த அணை கி.பி. 1887 ல் தொடங்கப்பட்டு 1895 ல் அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்தால் கட்டி முடிக்கப்பட்டது. பெரியார் நதி மேற்குத்தொடர்ச்சி மலையின் ஏலகிரியில் தொடங்கி கேரளா வழியாக சென்று அரபிக்கடலில் கலக்கிறது. இதில் வீணாக கடலில் சென்றடையும் நீரை மலையைக் குடைந்து பாதை அமைத்து கிழக்கு முகமாக திருப்பி விட்டால் வைகை ஆற்றை அடைந்து மதுரை ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என்று ஆங்கிலேய பொறியியல் வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் முல்லை ஆற்றையும் இதில் இழுத்து விடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. அப்போதைய சென்னை மாகாண கவர்னர், திருவான்கூர் மகாராஜா இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கட்டுமானப் பணி தொடங்கியது. இந்த நீர் பங்கீடு காலவரையறையாக 999 வருடங்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி அந்த காலக்கட்டம் வரையில் அணையின் மேற்பார்வை, சொந்தக்காரர், பராமரிப்பு எல்லாம் சென்னை மாகாணத்தின் வசம் வந்தது.  அணையின் மொத்த உயரம் 176 அடி, நீளம் சுமார் 1200  அடி அகலம் 138 அடி. எட்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அணை கட்ட கேரளம் கொடுத்ததால்  சென்னை மாகாணம் ஒரு ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் நாற்பதாயிரம் ரூபாய் வரி கட்டவேண்டும் என்ற நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கியது.

மலையை குடைந்து அணையின் நீர் பாய வழி செய்யவேண்டும் என்பதால் வேலை மிகவும் கடினம். மேலும் இடுக்கி காடுகள் நிறைந்த இடம், மலேரியா கொசுக்களின் தொல்லை அதிகம். இந்த நோய் தாக்கி 483 பேர்உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் உடல்கள் அணையின் அருகிலேயே உள்ள நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மலேரியா காய்ச்சலை தடுக்க நாட்டு சரக்கு (சாராயம்) தடுப்பு மருந்தாக செயல்பட்டது என்பது தனி விஷயம்.

ஒரு கால கட்டத்தில் அணை கட்டுமானத்தை கைவிட்டு விடலாம் என்று பொறியாளர்கள் இருந்த பொழுது “பென்னி குயிக்” என்ற ஆங்கிலேய பொறுப்பாளர் தன் மனைவியின் நகைகளை விற்று இந்த அணையை கட்டி முடித்தார்.. மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தின் முன்னே இவருக்காக சிலை வைக்கப் பட்டிருக்கிறது. சமீபத்தில் 2002 ம் ஆண்டு இவருடைய பேரனை மதுரைக்கு அழைத்து தமிழக அரசு மரியாதை செய்தது சிலருக்கு நினைவிருக்கலாம்.

அதற்கு பிறகு சுதந்திர இந்தியாவில் இந்த ஒப்பந்தம் கடை பிடிக்கப் பட்டு வந்தாலும் பின்னால் வந்த அரசியல் கட்சிகளால் பிரச்சினை சிறிது சிறிதாக வெடிக்க ஆரம்பித்தது.

தமிழ் நாடு பின்பு அங்கு ஒரு நீர் மின் உற்பத்தி நிலையம் அமைத்தது தனி கிளைக்கதை. 
தற்போதைய பிரச்சினை என்ன?
கேரளா அரசாங்கம் அணைக்கு 116 வயதாகிவிட்டது, இதை பழுது பார்க்கவும் முடியாது அப்படியே முடிந்தாலும் இயற்கை பேரழிவுகளை தாங்காது. ஆதலால் தற்பொழுது தேக்கி வைக்கும் அணையின் உயரம் 136 அடியிலிருந்து 120 ஆக குறைக்க வேண்டும் என்கிறது. மேலும் 1988 ல் இடுக்கி பிரதேசத்தில் 4.0 அளவிற்கு பூகம்பம் வந்தது, அது போல் மறுபடியும் வந்தால் உயிர் சேதம் நிறைய ஏற்படும் என்பது கேரள அரசின் வாதம்.

தமிழ் நாடு அரசோ உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் ஏற்கனவே மதுரை ராமநாதபுரம்  விவசாயிகள் முப்போகம் போய் இரு போகம் தான் விளைவிக்கிறார்கள், இதனால் அரசாங்கத்திற்கு பெறும் நஷ்டம் என்கிறது. மேலும் பூகம்பம் வரும் என்பதெல்லாம் வெறும் புரளி என்கிறது. அப்படியே அணை உடைந்தாலும் அதன் நீரை இடுக்கி அணை தாங்கிக்கொள்ளும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இது வெகு நாட்களாக நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை. இதற்காக அமைக்கப்பட்ட நீதிபதிக் குழு சண்டை பொறுக்கமுடியாமல் நீங்களே அடிச்சிக்கோ பிடிச்சிகோங்கப்பா என்று கை கழுவி விட்டனர்.
அதுதான் இப்பொழுது பெரியதாகி ஐயப்ப பக்தர்களை அடிப்பது, லாரியை நொறுக்குவது என்று ஆர்ப்பாட்டம் வலுத்துக் கொண்டிருக்கிறது.

இப்பொழுது பிரச்சினை வெடிக்கக் காரணம் என்ன?
இடுக்கி ஏரியாவில் இருந்த கேரளா காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் (அமைச்சருங்கூட) மரணமடைந்ததால் இடைதேர்தல் வருகிறது. கேரளா காங்கிரசிற்கு அந்த இடத்தை பிடிப்பது காலத்தின் கட்டாயம் அவர்களுடைய மெஜாரிட்டி வெறும் ஒரு நபர் மட்டுமே. இப்பொழுது நமக்கு காரணம் புரிகிறது. மேலும் கூடங்குளம் பிரச்சினை பூகம்பத்தை மையப்படுத்தி செய்யப்பட்டது. அதையே காரணம்காட்டி கேரளா காங்கிரஸ் இப்பொழுது மல்லுக்கு இழுக்கிறது. இதற்கு மேல் இந்த அரசியல் சித்து வேலையை படம் வரைந்த பாகங்களை குறிக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அணையின் உயரத்தை அதிகரிப்பது இரண்டு மாநிலங்களுக்கும் ஆதாயம் தரும் விஷயம். அணை பாதுகாப்பை பற்றிய அச்சம் தேவையில்லாதது, அரசியல் காரணங்களால் ஊதி பெரியதாக்கப்படுகிறது.
இப்பொழுது மத்திய அரசின் தந்திரம் வெட்ட வெளிச்சமாகிறது. நமது அரசாங்கம் என்ன செய்யப்போகிறது பார்ப்போம்?

அணை உடைந்தால் அதை தாங்கிக்கொள்ள இடுக்கி அணை இருக்கிறது, நாட்டின் ஒருமைப்பாடு சிதைந்தால்???

Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

ஓசூர் ராஜன் said...

தொடருங்கள், தொடர்கிறேன்! வாழ்த்துக்கள்!!

கோகுல் said...

சுருக்கமாக சொல்லியிருந்தாலும் வரலாறை தெளிவாக புரியும் படி சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால் பிரச்சினை சுருக்கமாக முடிவதைப்போல தெரியவில்லை.எல்லாத்தையும் அரசியலாக்கப்பார்க்கும் நரிகள் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் தொடரத்தான் செய்யும்.என்ன செய்ய?

ஓசூர் ராஜன் said...

த.ம.2

கும்மாச்சி said...

ஓசூர் ராஜன், கோகுல் வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையா சொன்னீங்க.

கும்மாச்சி said...

நன்றி எஸ்ரா.

தமிழ்மலர் said...

முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமையும் தமிழகத்துக்கு தான் என்ற கருத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை. ஆனால் ஒரு எதார்த்த தமிழனாக இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு ஊடகங்களின் பீதி கூட்டலின் உச்சம் வேறு. அணு அணுவாக செத்துமடியும் இந்த உயிர்களின் மரண கூக்குரலை தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்கள்.

அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

முல்லைபெரியாறு அணையின் பயன்பாடு இல்லாமலே தமிழகம் தாராளமாக தண்ணீர் எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கும்போது எதற்காக பிரச்சனையையே தீர்வாக வலியுறுத்தி வருகிறீர்கள்? ஒரு பிரச்சனைக்கு அதன் மாற்றுவழி ஒன்று தானே உண்மையான தீர்வு.

கிழக்கு இந்திய கம்பெனியால் முதன் முதலில் பரிசீலிக்கப்பட்ட திட்டம், பென்னிகுயிக் விரும்பிய திட்டம் இது ‘‘கூடுதல் கால்வாய்கள் மூலம் தண்ணீரை நேரடியாக தமிழகத்துக்கு கொண்டு வருதல்’’. பென்னிகுயிக்கிடம் நிதி இல்லாமல் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதே தவிர வாய்ப்பு இல்லாமல் அல்ல. இந்த திட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக அமையும். கேரள மக்களின் தலைக்கு மேல் உள்ள மரண பயத்திற்கு முழுமையான ஆறுதலை தரும்.

இந்த திட்டத்தை ஏன் பரிசீலித்து செயல்படுத்தக்கூடாது?

இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு உண்டா? சுமூகமான தீர்வுகள் இருக்கும்போது ஏன் தமிழர்கள் வீண்பிடிவாதம் பிடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை என்றும் தமிழர்களுடையது தான். ஆனால் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையிலாவது கேரள போராட்டக்குழுவின் கோரிக்கையை பரிசீலியுங்கள்.

இந்த கோரிக்கையில் 1% மேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

மன்மதக்குஞ்சு said...

அருமை

கும்மாச்சி said...

மன்மதன் வருகைக்கு நன்றி.

rajamelaiyur said...

//அணை உடைந்தால் அதை தாங்கிக்கொள்ள இடுக்கி அணை இருக்கிறது, நாட்டின் ஒருமைப்பாடு சிதைந்தால்???//

நல்ல கேள்வி . ஆனால் பதில் ?

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ராஜா.

சி.பி.செந்தில்குமார் said...

ஓக்கே ரைட்டு

கும்மாச்சி said...

என்ன ரைட்டு?


ஹி ஹி வருகைக்கு நன்றி செந்தில்.

SURYAJEEVA said...

அருமையான அலசல்... எனக்கென்னவோ இந்த பிரச்சினை பல முன்னணி பிரச்சினைகளை மக்கள் மனதில் இருந்து மறக்கடித்து விட்டதாகவே தெரிகிறது.. கேரளா அரசு கட்டி தரும் அணை தமிழகத்திற்கு நீர் தராது என்று வாதிடும் முன்னாள் பொறியாளர்களின் வாதத்தை கேட்ட பிறகு... ஒரு மாற்று தீர்வை இந்த பொறியாளர்கள் தமிழக அரசுக்கு வைத்தால் இன்னும் நலம்... ஆனால் இதற்க்கு அரசியல் தீர்வு என்பது அனைத்து நதி நீர்நிலைகளையும் தேசிய மயமாக்குவதில் தான் உள்ளது...
ஆனால் அதுவும் ஒரு சிக்கலை தருகிறது... சிக்கல் இல்லாத வழி இருக்கிறதா என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்

கும்மாச்சி said...

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சூர்யஜீவா.

அருள் said...

முல்லைப்பெரியாறு அநீதியும் முதுகெலும்பில்லாத தமிழ்நாடும்

http://arulgreen.blogspot.com/2011/12/blog-post_09.html

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.