Monday 13 July 2009

கொண்டாபுரத்து தேவதை


நண்பனுக்கும் எனக்கும் மும்பையில் வேலை நிமித்தமாக நேர்காணல். இருவரும் பள்ளியிலிருந்தே தோழர்கள், கல்லூரியிலும் ஒரே சப்ஜெக்ட் எடுத்தோம். பின்பு ஒருவழியாக தேறி இப்போது வேலைதேடும் படலம். மும்பைக்கு தொடர் வண்டிப் பயணம். எதையும் புதிதாக செய்யும் ஆர்வம். மும்பை முதன் முதலாக பார்க்கும் ஆவல் எல்லாம் கலந்து கட்டிய எண்ணங்களோடு பயணித்துக்கொண்டிருந்தோம்.

வண்டி ஆந்திரா வழியாகப் போய்க்கொண்டிருந்தது. இரவு ஏழு மணி ஆனவுடன் நண்பன் அவன் அண்ணனிடம் சுட்ட அரை பாட்டில் விஸ்கி வைத்திருந்தான். இருவரும் வண்டியின் வாயில் புறமாக ஒதுங்கி கையில் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலுடன் மிக்ஸ் செய்து சக பயணிகளுக்கு தெரியாமல் சப்பிக்கொண்டிருந்தோம். பின்பு சாப்பிட்டு, அவரவர் இருக்கையில் படுத்து உறங்கிப் போனோம்.

நடு இரவில் நல்ல நான் மான்களெல்லாம் துரத்த ஒரு அழகியப் பெண்ணை கனவில் துரத்திப் கையைப் பிடிக்கும் வேலையில் என்னை யாரோ உலுக்கி கனவைக் கலைத்தார்கள். பார்த்தல் நண்பன், "டேய் தண்ணி பாட்டில் எங்கேயடா" என்றான்.

"நீ தானேடா கடைசியாக எடுத்துக் கொண்டு வந்தாய்" என்றேன். அந்த பாட்டில் காலியாக இருந்தது, சரக்கடிக்க உபயோகித்து விட்டோம்.

"டேய் ரொம்ப தாகமாக இருக்குடா, தண்ணி வேண்டுமேடா" என்றான்.

எனக்கும் இப்போது தண்ணீர் வேண்டியிருந்தது. போட்ட சரக்கும், சாப்பிட்ட மசாலா சாப்பாடும், கோடை வெயிலில் வண்டியின் இரவின் சூடும், நல்ல தாகத்தை கிளப்பி விட்டிருந்தது. சகப் பயணிகள் யாவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

வண்டி அப்போது வேகம் குறையவே நண்பன் "டேய் வாடா எதோ ஸ்டேஷன் வருது, தண்ணீர் பிடித்துக்கொண்டு வரலாம் என்றான். அப்போது இருட்டில் வண்டி எதோ ஒரு ஸ்டேஷன் உள்ளே நுழைவது போலிருந்தது, வண்டி வேகம் மேலும் குறையவே "டேய் நீ இறங்கி பிடித்துவாடா, நான் கதவருகே நிற்கிறேன்” என்றான்.

நான் வண்டி நகர்ந்து கொண்டிருக்கும் போதே இறங்கி தண்ணீர் குழாயைத் தேடி சென்றேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஸ்டேஷன் மாஸ்டர் ரூம் போல இருந்த ஒரு இடத்தில் ஒற்றை விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது, நான் அந்த திசையை நோக்கி ஓடினேன்.

நான் தண்ணீர் குழாயை அழுத்தி தண்ணீர் பிடிக்கும் பொழுது, திரும்பி வண்டியைப் பார்த்த பொழுது, வண்டி வேகம் பிடிக்க தொடங்கியது, நான் பாட்டிலை குழாயிலிருந்து பிடுங்கி திரும்பி வண்டியிடம் செல்லும் பொழுது கடைசி தொடர், என்னை அம்போ என்று விட்டு விட்டு வேகம் பிடித்தது. இருட்டில் நிலைமை புரிய பயம் தொற்றிகொண்டது. நான் அந்த ஒற்றை வெளிச்சம் உள்ள அறையை அடைந்த பொழுது உள்ளே யாரும் தென்படவில்லை. சுவற்றில் "கொண்டாபுரம்" என்று மஞ்சள் போர்டில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மற்றும் ஜாங்கிரி ஜாங்கிரியாக கருப்பு வண்ண மசியில் எழுதியிருந்தது. ஒரு அரை நிஜாரும், டி ஷர்டும் அணிந்துகொண்டு ரப்பர் செருப்புடன், ஒரு அத்வானக் காட்டில் தன்னந்தனியாக என் நிலைமை எனக்கே பரிதாபமாக இருந்தது. நேர்காணலுக்கு எப்படி போகபோகிறேன், மேலும் ஆளில்லா இந்த ஸ்டேஷனில் அடுத்த வண்டி வரும் வரை எப்படி கழிக்கப் போகிறேன் என்று இருந்தது. தொலைவில் பல வினோதமான சப்தங்கள் வேறு.

கம்பி வேலி வழியாக வெளியே நோக்கினேன், யாரும் தென்படவில்லை. ஒரு அரைமணி போயிருக்கும், எதோ சப்தம் கேட்கவே வேலிக்கு அப்பால், யாரோ ஒருவர் சைக்கிளில் வருவது தெரிந்தது. "ஐயா" என்று குரல் கொடுத்தேன். சைக்கில் நேராக என்னருகே வந்து ஒரு கிழவன் "ஏமி" என்றான். நான் எனக்கு தெரிந்த திருப்பதி தெலுங்கில் "வண்டி போயுந்தி" என்றேன். கிழவனுக்கு என் நிலைமை புரிந்திருக்க வேண்டும். என்னை வெளியே வரச்சொல்லி தன் சைக்கிளில் அமரச்செய்து வண்டியை ஓட்டினான். வீடு அங்கு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. தொலைவில் இரண்டு மலைகள்தான் தெரிந்தன. ஒரு அரை மைல் போனவுடன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, வயலுக்கு நடுவே உள்ள ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்றான்.
வீட்டில் உள்ளே அழைத்து சென்று என்னை ஒரு சாளரம் ஓரமாக இருந்த திண்ணை போல இருந்த இடத்தில் படுக்கசொன்னான். அவன் கீழே தரையில் படுத்துக் கொண்டு என்னை எங்கிருந்து வருங்கிறேன் என்றெல்லாம் கேட்டுவிட்டு குறட்டை விட ஆரம்பித்தான். எனக்கு தூக்கம் வரவில்லை, அப்பப்போ வளையல் சத்தம் வேறு கேட்டுகொண்டிருந்தது, அது வீட்டிலிருந்து வருகிறதா, அல்ல வெளியே ஏதாவது மோகினிப் பிசாசா ஒன்று தெரியவில்லை. எப்பொழுது உறங்கினேன் என்று எனக்கே தெரியாது. சிறிது நேரம் கழித்து முழிப்பு வந்த பொழுது, வெளிச்சம் சாளரத்தின் வழியே தெரிந்தது, நான் என் நிலைமை அறியுமுன், சாளரத்தின் ஊடே நான் கண்ட காட்சி, என்னை தன் நிலை மறக்க செய்தது.

என் கைக்கெட்டும் தூரத்தில், சாளரத்தின் மிக அருகில் ஒரு பெண்ணின் திறந்த மார்பு தெரிந்தது. எனக்கு கனவா நனவா ஒன்றும் புரியவில்லை. ஒரு அனிச்சையான செயலாக என் கை அந்த திசை நோக்கி நீண்டது, உடனே ஒரு குரல் "ஒத்து பாபு" என்றது, குரல். எனக்கு நிலைமை புரிந்து பயம் தொற்றிக்கொண்டது, நாமே இங்கு அடைக்கலமாக வந்து, எந்தக் காரியம் செய்ய இருந்தோம். இவள் யார் இந்த வீட்டில் உள்ளவளா, கிழவனிடம் சொன்னால் என்ன ஆகும், மவனே நமக்கு இன்று சமாதிதான் என்று எழுந்து விட்டேன். கிழவன் நான் எழுந்த அரவம் கேட்டு அவனும் எழுந்து விட்டான்.

பிறகு கிழவன் தண்ணீர் எல்லாம் எடுத்துக் கொடுத்து முகம் கழுவச்சொல்லி, “கொண்டம்மா” என்று குரல் கொடுத்தான், கொண்டம்மா வந்த பொழுது எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது, சந்தேகம் இல்லாமல் இவள் தான் சாளரத்தின் அருகே குளித்துக்கொண்டிருந்தது. நல்ல "ராஜமுந்திரி" தேகம், சினிமாவில் வரும் அழகிகளெல்லாம் இவள் முன்னால் "ஜூஜூபி".

என்னை பின்பு அவள் வீட்டின் உள்ளே அழைத்து சென்று நல்ல சூடாக டீ கொடுத்தாள். எனக்கு அவளை நிமிர்ந்து பார்க்க பயமாக இருந்தது. காலையில் நடந்ததை கிழவனிடம் சொன்னால் என்ன ஆகும்?. நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்க வில்லை. கிழவன் என்னை தயாராக இருக்கச் சொன்னான். தெலுங்கிலேயே எதோ தொடர் வண்டி வரப்போவதாகவும், அதில் நான் போகலாம் என்றும் சொன்னான்.
நாங்கள் சைக்கிளில் கிளம்புமுன் கொண்டம்மா என்னிடம் ஒரு பொட்டலமாக எதையோக் கொடுத்தாள். நான் வழியில் சாப்பிடுவதற்கு போலிருக்கிறது.

கிழவன் வண்டியை கிளப்பும் பொழுது, என்னைப் பார்த்து கொண்டம்மா "போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்" என்று மெல்லியக் குரலில் சொன்னாள்.

அவள் என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை. பிறகு நான் வண்டி பிடித்து மும்பை போய் நண்பனுடன் நேர் கானல் சென்றதெல்லாம் பெரியதாகத் தெரியவில்லை. கொண்டாபுரத்தில் கண்ட தேவதை என் நினைவை விட்டு அகலவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

நிகழ்காலத்தில்... said...

நல்ல எழுத்து ஓட்டம்
தொடர்ந்து எழுதுங்கள். எழுத்துலகில் சிறப்பிடம் உண்டு

கும்மாச்சி said...

மிக்க நன்றி, உங்கள் ஊக்கம் மேலும் என் எழுத்தை மேன்மைப் படுத்த உதவும்.

பித்தன் said...

அண்ணாச்சி கண்ணுக்கெட்டுனது வாய்க்கு எட்டாம போச்சே, போ பாபு மஞ்சு கேட்ச் போயிந்தே....

ச ம ர ன் said...

சூனா பானா, இத இப்புடியே மெயின்டைன் பண்ணு..பெரிய லெவலுக்கு வரலாம்

கலையரசன் said...

//போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்//

அதுக்கு என்னா அர்த்தங்கண்ணே?

ரெட்மகி said...

கலையரசன் said...

//போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்//

அதுக்கு என்னா அர்த்தங்கண்ணே?

அண்ணே

//போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்// ==

போய்டு வாங்க சின்ன பையா திரும்ப பார்க்கலாம் என்று அர்த்தம் (enaku thering telegu)

கும்மாச்சி said...

போயிட்டு வாடா பைத்தியக்காரா திரும்ப பார்க்கலாம். இது எனக்குத் தெரிந்த தெலுங்கு

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.