Monday 27 July 2009

தவக்குமார் இன்னாடா மவனே எப்படிடா கேக்கலாம்.?






தெரியும்டா தவா மவனே உன் செல் கிராஸ் செய்து போவோ சொல்ல கொரல் வுட்றே.
உன்னியே பாக்கமாட்டேண்டா?

மவனே நாம் மாட்னா என்னே சுளுக்கேடுத்துருவானுங்கோ.
அதுகண்டி இல்லே, நீ வெளிலே வந்தா என்னையேப் போட்டுத் தள்ளிடுவே.
அல்லாம் தெரியுதுமா, நானும் நீயும் ஜோடியாப் போனா அல்லாப் பயலுவளும் அலறுவானுங்கோ. அந்தப் பரத் ஓட்டலாண்ட, போனவருஷம் தீவளிக்கி மொதநா புல் டைடாயி நல்லா கறிதுன்னு,, துட்டுகேட்ட சர்வர் மவனே, வாய் வெத்திலப்பாக்கு போடவேச்சொமே அப்போ மாட்டினா கூட ஒன்னயே எதோ சும்மனாங்காடியும் நாலு தட்டுதட்டி வுட்ட்ருப்பனுங்கோ.

அத்தவுடு ஒரு கா நீ விரியம்பக்கம் போய் இட்டந்தையே ஒரு பிகரு, அதே நம்ம இட்டுகினு கோவாலு இல்லாதே சொல்லே, அவன் குடிசைக்கு பின்னாடி வச்சு நொந்கொஸொல்லொ, அப்போ பக்கத்துவூட்டு பேமானி போட்டுக்குடுட்து, எட்டு வரசொல்ல எஸ்கேப் ஆனோமே, அல்லாம் உன்னியே மாதிரி ஆளுதாண்ட கணுக்கா செய்யமுடியும். தொ அங்கினே மாட்டினான்காட்டியும் நீ இப்போ உள்ளே வந்துருக்கே மாட்டியேடா.
நான் அந்த கோகிலாவே கொதரிட்டு கைவுட சொல்லே அத்தே தம்பரத்துலே வச்சிக்கினு என் அப்பன் ஆயிக்கிட்டே போட்டு கொடுக்காம அத்தே அப்படியே பெரம்பூருக்கு பாக் பண்ணிகினியே நீ கில்லாடிடா.

அல்லாம் சரி, நான் தியேட்டராண்ட வரேசொல்லே, இன்னா நீ அந்த சேட்டுப்பையனை சொருவிட்டேயேடா. போலிசு உன்னியே கயித்தப் பிடிச்சு இட்டுகினு வண்டிலே எத்துறதே நான் பாத்து எஸ்கேப் ஆயிட்டேண்டா. சேட்டுப் பையன் இன்னா செஞ்சான் உன் டாவு மல்லிகாவே லேசா உறசிக்கினான், என்னாண்ட சொல்லிகிநேன்னு வயீ மவனே அவனே புட்டத்துலேயே போட்டு, மவனே குறகாலத்துக்கு குந்த வுடாம பண்ணிகினு இருப்பேன். உனக்கு இன்னாட அத்தினி காண்டு.

இப்போ செயிலாண்ட கொளுத்து வேலே செய்ய வந்த எண்ணியே சுரங்கப் பாதை வெட்ட சொல்லுறியே இது நியாயமா?

நானே இப்போதான் அல்லாத்தையும் வுட்டுகினு, கண்ணாலம் கட்ட்டிகினு கமுக்கமா கிறேன்.

எண்ணியே கேக்குறியேடா, வாணாம், இன்னொருதபா உன்னியே நான் பாக்கமாட்டேன்.

அப்பாலே வெளியே வந்து, மொத வேலையே என்னியப் போட்டு தள்ளிடுவே,

ஆங் மல்லியாவே நான் இப்போ ஜபெர்கான் பெட்டையாண்டே வச்சிகினு, நீ திரியும் வரமாட்டேன்னு சொல்லி ஒட்டிகினுகிறேண்டா, மன்னிச்சிக்க மாமு.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

பேட்டை பாஷையில் பிசிரு தட்டி இருக்கிறீர்கள்..

பித்தன் said...

நா ஒர்தபா மல்லியாவே.............

கும்மாச்சி said...

ஓர் தபா இன்ன ரெண்டு தாபாக் கூடா, வோட்டப் போடு மாமு

VISA said...

யாரு அந்த மல்லிகாவா மாமே....அவள காண்டி நீ நம்பின உன் வாழ்க்க மிர்சல் தான். ஒரு தபா கமலா தியேட்டருக்கு இட்டுகின்னு போயி மல்லி பூ கார முறுக்கெல்லாம் வாங்கி குடுத்து உஷார் பண்ணி ரெண்டு டிக்கிட்டு கூட எடுத்துட்டேன். ஒண்ணுக்கிருந்துட்டு வர்ற கேப்புல ஒண்ணாங்கிளாஸ்ல கூட படிச்சவன்னு சொல்லி ஒரு ஓணான் பையன் கூட ஒதுங்கிகினா.

எங்கள் ஊர் பெரம்பூரை கதையில் இழுத்து இளிவு படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இங்ஙனம்.
பெரம்பூர் வெத்துவேட்டு சங்கம்.

ஹேமா said...

ஐயோ கும்மாச்சி ஒண்ணுமே புரிலங்கோ.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.