Wednesday 22 July 2009

அப்பா கொடுத்த அம்மா


அவன்
குழந்தையைப் பிரிந்து ஒரு பொழுதுக் கூட இருக்க முடியவில்லை. அபர்ணாவுக்கு என்னை விட்டால் யார் இருக்கிறார்கள் தாத்தாவையும் பாட்டியையும் தவிர. அவர்கள் நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் வயதாகிவிட்டது. அக்காவோ ஜெர்மனியில் இருக்கிறாள். நான்கு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வந்து போகிறாள்.

எவ்வளவோ மேனேஜரிடம் கெஞ்சியும் என்னை இரண்டு நாட்களுக்கு இந்த வேலைய முடிக்க இந்த ஊருக்கு அனுப்பிவிட்டார். ஒருமணிக்கு ஒரு முறை வீட்டுக்கு தொலை பேசி ஆகிவிட்டது. குழந்தை என்னைப் பிரிந்து ஏங்குகிறாள். கமலீ எப்படி என்னையும் குழந்தையும் தனியே விட்டுப் போக மனசு வந்தது. நீ என்ன செய்வாய் உனக்கு வந்த மூளைக் கட்டி எனக்கு வந்திருக்கக் கூடாதா. தூக்கம் பிடிக்கவில்லை.

ரூம் மணி அடிக்கிறது. யார் இந்த வேளையில். கதவைத் திறந்தேன், அவள் சுதந்திரமாக அறையினுள் நுழைந்தாள். நல்ல அழகி, தவறி என் அறையினுள் நுழைந்து விட்டாளோ?
இல்லை அவள் போலீஸ் ரைடுக்கு பயந்து இங்கு சடுதியில் என் அறையில் நுழைந்து விட்டாள். இந்த ஓட்டலிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா. என்னை மன்னிச்சிடுங்க சார் என்கிறாள்.

இரவு தங்க அனுமதி கேட்கிறாள். எனக்குப் பாவமாக இருக்கிறது. இரவு அவளிடம் விசாரித்தப் பொழுது . தன கதையை என்னிடம் கூறினாள். இவள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு கயவனால் ஏமாற்றப் பட்டிருக்கிறாள். அது வீட்டிற்கு தெரிந்து இவளை விரட்டி இருக்கிறார்கள். பின்பு அவள் நாதியற்று நாயடி பேயடி பட்டு இந்தத் தொழிலில் தள்ளப் பட்டிருக்கிறாள்
காலையில் அறையை விட்டு கிளம்பிவிட்டாள்.

அவள்

நான் பார்த்த ஆண் பிள்ளைகளில் இவன் வித்யாசமானவன் என்று நினைத்து கொண்டிருந்தேன், அவன் அடுத்த நாள் என்னை ஓட்டல் வாசலில் கண்டு என்னைக் கூப்பிடும் வரை.

என்னை அறையினுள் அழைத்துச் சென்றான். ஆனால் என்னைத் தொடவில்லை. அவன் மனதில் இருப்பதை சொன்னான். பாவம் மனைவியை இழந்து குழந்தையுடனும், வயதான பெற்றோருடன், அவர்கள் அவனை நினைத்து மனசு நொந்து போவதையும் பற்றி. எனக்கு கேட்க என்னவோ போலிருந்தது. நான் பார்த்தவர்கள் ஒரு குவார்டரை குடித்து விட்டு முள்ளு மூஞ்சியுடன் என் மார்பில் தடவுவார்கள். பின்பு தாகம் தீர்ந்தவுடன் கட்டிப் பிடித்து குறட்டை விடுவார்கள். இவன் வித்யாசமானவன்.

பிறகு அவன் விருப்பத்தை சொன்னான். எனக்கு நம்ப முடியவில்லை. இவனை நம்பி போவது எனக்கு பிடித்திருந்தது, ஆனால் எந்த அளவுக்கு உண்மை.

ஆனாலும் முடிவெடுத்து விட்டேன். என்ன புரோக்கர் தகராறு பண்ணுவான். அவன் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுக் கிளம்பவேண்டும்.

பெற்றோர்

அவளை எங்களுக்கு பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து விட்டது. குழந்தையுடன் ஒட்டிக்கொண்டு விட்டாள். கல்யாணம் வெறும் சம்பிரதாயமாக ரெஜிஸ்டர் ஆபீஸில் வைத்துக் கொண்டோம். எங்களையும் குழந்தையும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறாள். ஷீலாவும் ஜெர்மனியிலிருந்து தம்பி சந்தோஷமாயிருந்தால் சரி என்று சொல்லிவிட்டாள்.

அவளின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை?

குழந்தை

அப்பா எனக்கு ஊரிலிருந்து நல்ல அம்மா கொண்டுவந்தார்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

VISA said...

intha kadhaiyai sona vidham enaku rompa pidithirukirathu. vazhthukal.

பாலா said...

அய்யா அருமை
வித்தியாசமான நடை அருமை இப்படி ஏதாவது முயற்சி செய்து கொண்டே இருங்கள்
அருமை

கலையரசன் said...

ஆகா.. இப்படியும் கதை எழுதலாமா?
ஜூப்பரு!!

பித்தன் said...

அண்ணே அசத்திபுட்டீங்க!! எழுத்து நடை ரொம்ப அருமை..... வாழ்த்துக்கள்

கும்மாச்சி said...

உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.

Anonymous said...

வித்தியாசமான அப்ரோச். சூப்பர்

ப்ரியமுடன் வசந்த் said...

சிறப்பாய் இருக்கிறது......

Unknown said...

Romba nalla irukku.. Pichitteenga ponga...

geethappriyan said...

நண்பர் கும்மாச்சி

நல்ல கதை ,இன்னும் நிறைய படையுங்கள்

ஒட்டு போட்டாச்சுங்க

நம்ம பதிவை கொஞ்சம் கண்டுகோங்க தலை.

geethappriyan said...

நண்பர் கும்மாச்சி


ஒட்டு போட்டாச்சுங்க

நம்ம பதிவை கொஞ்சம் கண்டுகோங்க தலை.


வித்தியாசமான சிறுகதை

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.