Tuesday 14 July 2009

அஞ்சா நெஞ்சனும் தளபதியும்


தலைப்பைப் பார்த்து இது எதோ கழகக் கண்மணிகளுக்கு என்று நினைத்து வந்தீர்கள் என்றால் அப்படியே அபிட் ஆயிடுங்கோ.

இது என்னையும் என் தம்பி “அங்குதன்” அஞ்சா நெஞ்சனையும் பற்றியது.
நாமதான் முதல் பிள்ளை என்பதால் அம்மாவிடமும், நைனாவிடமும் சில சலுகைகள் உண்டு. அது கைக்கு கிடைக்கும் முன்பே அஞ்சா நெஞ்சனுக்கு மூக்கில் வியர்த்துவிடும். அதை எப்படியாவது தடுத்து விடுவான். சலுகைகள் தனக்கு மட்டுமோ அல்லது இருவருக்குமோ கிடைக்குமாறு செய்து விடுவான். அம்மா கோழி அடித்து கறி வைத்தால் ஒரு லேக் பீஸ் நைனாவுக்கும் மற்றொன்றை நமக்கும் வைத்திருப்பார்கள், அவன் குறுக்கே பூந்து கும்மியடித்து லேக் பீசை லவட்டிடுவான்.
இருவரும் சேர்ந்து விளையாடினால் எப்படியும் பத்து நிமிடத்தில் இருவருக்கும் மூண்ட சண்டையில் முடியைப் பிடுங்கி, சட்டை கிழிந்துவிடும். குறுக்கே தடுக்க அக்கா வந்தால் முக்கலாகிவிடுவாள். இதிலே அனுபவம் பெற்ற அம்மா குறுக்கே வரமாட்டாள். “சண்டையிலே மவனே ரெண்டு பெரும் சாவுங்கடா” என்பாள்.

ஆனால் இவையெல்லாம் இருந்தும் வூட்டுக்கும், ஊருக்கும் அல்வா கொடுக்கிறது, பக்கத்து தோட்டத்துலே மாங்கா தேங்கா அடிக்கிறது, மவனே எங்க கூட்டணியை எவனும் பிரிக்கமுடியாது. தெருவுலகீர பயலுக, விடலைப் பொண்ணுங்க எல்லோருக்கும் மவனே எங்களைக் கண்டா ஒன்னுக்கு இருந்துருவாங்கோ. ஊருலே நடக்கிற டகல்பாஜி வேலை எல்லாம் நாங்க சேர்ந்துதான் நடத்துவோம். நம்ம அஞ்சாநெஞ்சன் கிறானே அவன் நல்ல பல சாலி, நம்மளவிட சின்னவனா இருந்தாலும், ஆளு சும்மா கெடா வெற்றவன் கணக்கா இருப்பான். விஷயம் தெரியாதவங்க அவன் தான் அண்ணன்னு என்னிக்குவாங்க. அதெல்லாம் விடுங்க இப்போ நான் இன்னா சொல்றேன்னா இந்த அஞ்சா நெஞ்சன் கொஞ்ச நாளா நம்மளைக் கண்டா பம்முறான். இன்னா விஷயம் சொல்றேன் கம்முன்னு கேளுங்க.
நைனா கடை வேலையெல்லாம் முடிச்சு, ரவைக்கு வூட்டுக்கு வந்து நம்மாலே கேட்டுகிறார். நம்ம அஞ்சா நெஞ்சனோட திருட்டுக் டம் அடிச்சு வூட்லே என்ட்ரி குடுக்கொசொல்ல, நைனா பாஞ்சி வந்து வுட்டாரு என் செவுள்ளே. எனக்கு வாயி வெத்தலைப் பாக்கு போட்டுகிச்சு.

"இன்னாடா செஞ்ச சேட்டு பொண்ணுகிட்டே", அப்படிங்கிறாரு.

"நான் இன்னா செஞ்சேன் நைனா, எனிக்கி ஒன்னும் தெரியாது, மெய்யாலுமா" ங்குறேன்.
நைனா இன்னாடா மவனே பொய்யா சொல்லுறே, நம்மலே ரௌண்டு கட்டி அடிக்குறாரு.
நம்ம அஞ்சா நெஞ்சன் கூட வந்தவன் எங்கேயோ அம்பேல் ஆயிட்டான்.

"இல்லே நைனா மெய்யாலுமா நான் ஒன்னும் செய்யலே நைனா", ங்குறேன்.
"அப்போ வாடா சேட்டு வூட்டுக்கு",

நமக்கு இன்னா பயம், "வா நைனா, நான் ஒன்னியும் செய்யலே நைனா".
சேட்டு வூட்டுக்கு போய் நைனா, சேட்டாண்ட "சேட்டு நம்ம பையன் ஒன்னும் ராங் செய்யலே சொல்லுறான்" ன்னாரு.

சேட்டு அவன் தர்பூசணி சைசுல கிற வவுத்த வச்சிகின்னு, உள்ளே "ரவீனா" ன்னு குரல் வுடுறான்.

சிம்ரன் கணக்கா ஒரு பிகுர் வந்து நின்னுச்சு.

“இன்னா பேட்டி இவனா உங்கிட்டே ராங் பண்ணிச்சு”, ங்குறான்.

சேட்டு பொண்ணு நம்மலே லுக் வுட்டு, " கலத் ஹோகயா பப்பா, எ ஆதமி நை ஜி" ங்குது.
நைனா "சேட்டு எவனோ தப்பா சொல்லிக்கிறான் சேட்டு நம்ம பையன் அதுபோலே செய் மாட்டான்", ன்னாரு.

சேட்டு "பேட்டா மாப் கர்" ங்கிறான்.

"மாப் கர்ரா, மவனே சேட்டு உனக்கு வைகிரோம்லே ஆப்பு" அப்படின்னு நினைசுகினே நைன்னாவோட வந்துக்கினேன்

திரியும் வூட்டாண்ட வரசொல்ல, அஞ்சாநெஞ்சன் பம்மிகின்னு நிக்கிறான்.
அப்பாலே நம்மகிட்டே வந்து "அண்ணாத்தே இன்னா ஆச்சுங்கிறான்".

"மவனே சேட்டு பொண்ணு கிட்டே எவனோ ரவுசு கட்டிகிறான், அது நம்மளே ராங்கா சொல்லிகிது"

"வேறே எதாச்சும் சொல்லிச்சா" அஞ்சா நெஞ்சன்.
"ஏண்டா இன்னாத்துக்கு கேக்குறே"

"ஒன்னும் இல்லேமா அது நான் தான், நைனாகிட்டே சொல்லிடாதே"

மவனே இப்போ எல்லாம் அஞ்சா நெஞ்சன் நம்மளே கண்டா பம்முறான், அதுவும் எப்படி, பொட்டை நாயி காலுக்கு ஊடாலே வாலே வுட்டுகின்னு ஓடுமே. அது போல.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

கலையரசன் said...

நான் உங்கள் ரசிகன்!!
பெருமைதானுங்கண்ணா.. பின்னே,
அடிச்சு பின்னுறீங்களே! உங்க வார்தையில்
வசியம் இருக்குண்ணே!

ஏக் தம்ல படிபோமுல்ல?

செங்குட்டுவன் said...

unnoda chennai senthamizh nalla keethu nainaa...rousa continue pannu nainaa..
appala ennoda bloggayum kandukka...inna varta..
senguttuvan
www.maathiyosee.blogspot.com

ஹேமா said...

கும்மாஞ்சி,இப்பிடி கும்மாளம் கொட்டுறீங்களே...!

கும்மாச்சி said...

ஹேமா உங்கள் ஆதரவிற்கு நன்றி. இத்தனை நாட்களாகஎங்கு போயிருந்தீர்கள்? .

ரெட்மகி said...

ஷோக்கா கீது நெய்னா ...

கும்மாச்சி said...

ரெட்மகி வோட்டபோடுங்கப்பு...

ரெட்மகி said...

சரி நெய்னா

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.