Tuesday 21 July 2009

சும்மாவா சொன்னாங்க அம்மா - சூரியகிரகணம்


அன்று சூரிய கிரகணம். முழு சூரிய கிரகணம். அம்மா எவ்வளவு தடுத்தும், அவள் நம்பிக்கையை கேலி செய்து, அவள் சொல்ல சொல்ல கேளாமல், வீட்டிலிருந்த உணவை உண்டு, என்னுடைய பட்டப் படிப்பு சான்றிதழை எடுத்துக் கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகம் நோக்கி கிளம்பிவிட்டேன்

அங்கு சென்றவுடன் நீண்டக் க்யு. என் முறை வர ஐந்து மணி நேரம் ஆகிவிட்டது. பின்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பெயரை பதிவு செய்து வீட்டுக்கு திரும்பிவிட்டேன். சூரிய கிரகணம் முடிந்து, வீட்டில் அம்மா செய்துவைத்த பலகாரத்தை உண்டு, மறுபடியும் வெளியே கிளம்பிவிட்டேன். இந்த முறை தெருக்கோடியில் நண்பர்களுடன் பிகுரே லுக் விட்டு மார்க் போடும் நேரம்.

இரவு வீட்டுக்கு வரும் பொழுது நல்ல தலைவலி. இரவு போகப் போக உடம்பு வலியும் சேர்ந்துகொண்டது. காலையில் எழுந்திருக்க முடியவில்லை. அம்மா எனக்கு நல்ல காய்ச்சல் என்று ஆஸ்பத்திரி கூட்டிசென்றாள். என்னால் நடக்க முடியவில்லை. கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்.

அவ்வளவுதான் எனக்குத் தெரியும், நான் எப்படி வீட்டுக்கு வந்தேன், எங்கு இருக்கிறேன் என்று எனக்கு சுயநினைவு வரும் வரை தெரியாது. என் சுய நினைவு வந்த பொழுது என் அம்மா என்னருகில் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தாள்.

பிறகு அக்கா நான் இரண்டு நாட்களாக நினைவில்லாமல், படுத்திருந்ததும், அம்மா அருகில் உட்கார்ந்து என் அருகில் அரற்றிக் கொண்டிருந்ததையும், சரியாக சாப்பிடாததையும் சொன்னாள்.

இப்போதெல்லாம் அம்மா இந்த மாதிரி எது சொன்னாலும் நான் கேட்டு விடுகிறேன். அவளின் நம்பிக்கைகளை கிண்டல் செய்வதில்லை. நான் நம்புகிறேனோ இல்லையோ, அவளின் நம்பிக்கை உணர்வு சம்பந்தப்பட்டது. அதைக் கிண்டல் செய்ததை நினைத்து வருந்துகிறேன்.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

ரவி said...

அம்மாவுக்காக அபத்தங்களை ஏற்றுக்கொண்டீர்கள் என்றால் பிறகு சோதிடம் வாஸ்து என்று எல்லா கந்தாயங்களையும் ஏற்றுகொள்ளவேண்டிவரும்..

ஓக்கேவா ?

உங்களின் அடுத்த தலைமுறைக்கு இதைதான் நீங்கள் விட்டுச்செல்கிறீர்களா ?

கும்மாச்சி said...

இதை நான் அபத்தங்களை எற்றுக்கொள்வதாகப் பார்க்கவில்லை, அவளின் உணர்வை அவமதித்ததாகப் பார்கிறேன். இன்று நாத்திகம் பேசும் எத்தனையோ பேர் குடும்பத்தில் மனைவிகளும் குழந்தைகளும் இதுபோல மூடநம்பிக்கையில் வாழ்கின்றனர்.

ஹேமா said...

கும்மாச்சி ,சிலவிஷயங்கள் பெரியவர்கள் சொல்வது நன்மைக்கே.அதில் விஞ்ஞான ரீதியான விளக்கங்களை இப்போது கண்டுபிடித்து அதன் தாக்கங்களச் சொல்கிறார்கள்தானே !

உடன்பிறப்பு said...

வரதட்சிணை என்னும் கொடுமை இன்னும் முற்றிலும் ஒழியாமல் இருப்பதற்கு பல அம்மாக்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. அம்மா என்கிற ஒரு வார்த்தையை வைத்து எல்லா தவறுகளுக்கும் துணை போகக் கூடாது

பித்தன் said...

உங்கள் ஏழாமிடத்தில் சனி ------ இப்போ ஜோதிடத்தையும் நம்புகிறீர்கள் இல்லையா!!!

VISA said...

இது ஒரு சர்ச்சைக்குரிய பதிவு என்பதால் நான் எஸ்கேப். போட்டாச்சு.....போட்டாச்சு....எத்தன......வுட்டா ஒவ்வொரு பத்திக்கும் ஒண்ணு கேப்பீங்க போல.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.